தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/முதுகில் அவ்வப்போது அரிப்பு ஏற்படுகிறதா? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்..!

முதுகில் அவ்வப்போது அரிப்பு ஏற்படுகிறதா? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்..!

முதுகில் அவ்வப்போது அரிப்பு ஏற்படுகிறதா? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்..!


UPDATED : மார் 28, 2023 06:43 PM

ADDED : மார் 28, 2023 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2023 06:43 PM ADDED : மார் 28, 2023 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலருக்கு நாள் முழுவதும் முதுகுப் பகுதியில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அரிப்பில் இருந்து விடுபட அடிக்கடி முதுகை நகங்களால் கீறத் தோன்றும். இவ்வாறு கீறும்போது சில நிமிடங்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் இந்த இடங்களில் சிறு கொப்புளங்கள் ஏற்படும். தினமும் சோப்பு போட்டு குளித்து சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்குக்கூட இந்த முதுகு அரிப்புப் பிரச்னை ஏற்படுவதுண்டு. முதுகு அரிப்பு மற்றும் எரிச்சல் சுகாதாரக் குறைவினாலும் வியர்வையினாலும் மட்டும் வரும் பிரச்னை அன்று. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவை என்னென்ன, இப்பிரச்னைக்கான தீர்வு என்ன எனத் தெரிந்துகொள்வோமா?

அதீத ரசாயனம் கொண்ட சோப்புகள், ஷாம்புகள், பாடிவாஷ், கண்டிஷனர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோருக்கு ஒவ்வாமை காரணமாக முதுகு அரிப்பு ஏற்படலாம்.

சில பாடி டியோட்ரென்ட்களின் ஒவ்வாமை காரணமாகவும் ஏற்படலாம்.

படுக்கையில் பலநாட்களாக சிகிச்சை பெற்றுவரும் முதியோருக்கு முதுகுக் கொப்புளங்களால் அரிப்பு ஏற்படலாம். இதற்கு 'பெட் சோர்' எனப் பெயர்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக பிட்டம் மற்றும் முதுகில் அரிப்பு ஏற்படலாம். இவர்களுக்கு உடல் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எதிராகவே செயல்பட வாய்ப்புள்ளது. இதனாலும் முதுகு அரிப்பு உண்டாகலாம்.

மெனோபாஸ் நிலை அடைந்த பெண்களுக்கு முதுகு அரிப்பு ஏற்படலாம்.

தோலை உறுத்தும் கடினமான ஆடைகள் அணிவதாலும் முதுகு அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். இதுதவிர கோடை காலங்களில் வியர்வையாலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினசரி குளித்து உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாமல் அசுத்தமாக இருப்பவர்களுக்கு கிருமித் தொற்றினால் அரிப்பு ஏற்படலாம்.

அதீத உப்பு நிறைந்த குளியல்நீர் சில சமயங்களில் அரிப்பை உண்டாக்கும்.

Image 1089630


முதுகு அரிப்பு ஏற்பட மேற்கண்டதுபோல பல்வேறு காரணிகள் உள்ளதால் எதனால் அரிப்பு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறுவது நல்லது. அரிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் வீட்டில் கைவைத்தியம் செய்யாமல் தோல் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் ஆயின்மெண்ட்களைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, வாசனை திரவியங்களை தோலில் நேரடியாகப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மிதமான ரசாயனம் கொண்ட குளியல் பொருட்களைப் பயன்படுத்தினால் சருமம் காக்கப்படும். நடுத்தர வயதுப் பெண்கள் இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் மேல் ஆடைகளைத் தவிர்த்து மிருதுவான ஆடைகளை அணிவது முதுகு அரிப்பைத் தடுக்கவுதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us