தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/இயற்கையாக பழுத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது ஈஸிதான்... !

இயற்கையாக பழுத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது ஈஸிதான்... !

இயற்கையாக பழுத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது ஈஸிதான்... !


UPDATED : ஏப் 26, 2023 01:10 PM

ADDED : ஏப் 26, 2023 01:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2023 01:10 PM ADDED : ஏப் 26, 2023 01:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீசன் என்பதால் சாலையோரங்களில் பார்க்குமிடங்களில் எல்லாம் மாம்பழங்கள் தான் ஆங்காங்கே மலை போல் குவிந்துள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகிலும் ஒரு சில பொருட்களுக்கு மவுசு குறைவதே இல்லை என்பதை மாம்பழம் வாங்க கூட்டம் குவிவதிலேயே உணரலாம். ஆனால், ஆசைப்பட்டு வாங்கக்கூடிய மாம்பழங்கள் ஆபத்தையும் அள்ளித்தருகிறது. வியாபாரப் போட்டி காரணமாக மாம்பழங்கள் இயற்கையாக பழுக்கும் வரை காத்திருக்க போதிய அவகாசம் இல்லாததால், செயற்கை முறையில் கார்பைடு கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது.

இதனால், வாந்தி, பேதி, மயக்கம், ஹைப்போ தைராய்டு, புற்றுநோய், நீரிழிவு மற்றும் கருப்பை பிரச்னை உட்பட பல்வேறு பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்னை, குழந்தை பிறப்பில் சிரமம் போன்றவை உண்டாகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதுபோன்ற மாம்பழங்களை தவிர்ப்பது சிறந்தது. எனவே, இயற்கையாக பழுத்த மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்...

Image 1103713


பொதுவாக இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் வாசனை தூக்கலாகவே இருக்கும். ஒரே பழத்திலேயே ஆங்காங்கே மஞ்சள், பச்சை, சிவப்பு, கோல்டன் போன்ற பல நிறங்களின் ஷேடுகள் கலந்திருக்கும். இயற்கையாகப் பழுக்கும் மாம்பழங்கள் பெரியதாக வளர வளர, பழுக்கும்போதும் அதன் பளபளப்புத் தன்மை குறைந்துவிடும்; வெளிப்புறத்தில் அடிப்பட்ட, அழுகியது போன்ற தோற்றம் காணப்படும். ஆனால் பழத்தின் சதைப்பகுதி நன்கு கெட்டியாக, சுவை நிறைந்ததாக இருக்கும். மாம்பழத்தை நறுக்கும்போது அதிலிருந்து சாறு வழியும். எத்தலின் என்ற ஒருவித ரசாயனம்தான் அந்த சாறை உருவாக்கும்.

Image 1103714


ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்தால் மனம் குறைவாகவே இருக்கும் அல்லது வேறு ஏதாவது வாசனை இருக்கக்கூடும். பழம் முழுக்க ஒரே மாதிரி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். மாம்பழங்கள் அதிக பளபளப்புடன் இருக்கும்; கெட்டியாக இல்லாமல் மிருதுவாக இருக்கும்; சுவையும் குறைவாகவே இருக்கக்கூடும். குறைந்தளவிலேயே சாறு வரும்; சிலநேரங்களில் சாறு வரவே வராது. குறிப்பிட்ட சீசனைத் தாண்டி மற்ற சீசன்களிலும் மாம்பழங்கள் பளபளப்புடன் கிடைத்தால் அது நிச்சயம் செயற்கையாக கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம்.

அப்படியும் சந்தேகம் இருந்தால் கடையில் வாங்கிய ஒரு டஜன் அல்போன்சா மாம்பழங்களை ஒரு பக்கெட் தண்ணீரில் போடுங்கள். அவை மூழ்கினால் இயற்கையாகவே பழுத்த பழம். இதற்கு மாறாக தண்ணீரில் அந்த அல்போசா மாம்பழங்கள் மிதந்தால் அவை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருப்பதாக பொருளாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us