sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

சுக்கு ஆரோக்கிய பலன்கள்

/

சுக்கு ஆரோக்கிய பலன்கள்

சுக்கு ஆரோக்கிய பலன்கள்

சுக்கு ஆரோக்கிய பலன்கள்


UPDATED : டிச 25, 2022 12:16 PM

ADDED : டிச 25, 2022 10:10 AM

Google News

UPDATED : டிச 25, 2022 12:16 PM ADDED : டிச 25, 2022 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஞ்சி, சுக்கு, கடுக்காய் உள்ளிட்ட மூன்றையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் பலவித அரோக்கிய பலன்கள் உள்ளன. அவை என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம். சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.

Image 1044527


ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும். அல்சரை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து தினமும் காலையில் எழுந்ததும் குடிப்பது நல்லது. சுக்கு தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க சுக்கு உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெதுவெதுப்பான பாலில் சுக்குப் பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்துவந்தால் சிறுநீரக நோய்த் தொற்று குணமாகும். சிறுநீர் பாதை தொற்றுகளை நீக்கும் இயற்கை வைத்தியம்.

சிலருக்கு நீண்டதூரப் பயணம் செய்வதால் தலைபாரம் ஏற்படும். தலையில் நீர் கோர்த்து இருந்தால், இரு புருவங்களுக்கு கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். இதனை குணப்படுத்த சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயத் தூளை சேர்த்து தலையில் தடவினால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். தலையில் இருக்கும் நீரை உறிஞ்சும் சக்தி சுக்குக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us