தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?


UPDATED : ஜூலை 26, 2026 12:33 PM

ADDED : ஜூலை 24, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 12:33 PM ADDED : ஜூலை 24, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? அதை செய்வது எப்படி?


'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகள் என்னென்ன?


உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.உருடன் இருக்கும் போது ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவைகளை தானமாக க் கொடுக்கலாம்.இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா). போன்றவையாகும்

யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?


நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”

“உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”


“18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.

உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளனவா?

ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள் இதுதான்:

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறு நீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள்.

“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

“பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்.

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதி சீராக வேலை செய்ய தடை இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us