தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கீமோதெரபி சிகிச்சையின்போது சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

கீமோதெரபி சிகிச்சையின்போது சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

கீமோதெரபி சிகிச்சையின்போது சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?


UPDATED : செப் 09, 2026 12:27 PM

ADDED : செப் 05, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 12:27 PM ADDED : செப் 05, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் சிறுநீரகங்களை பாதிக்க செய்யலாம். நாம் உட்கொள்ளும் மருந்துகளை உடலில் இருந்து வடிகட்டி வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்வதால், கீமோதெரபி சிகிச்சையின் போது அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

கீமோதெரபி சிறுநீரகங்களை எவ்வாறு பாதிக்கிறது?


கீமோதெரபி மருந்துகளை உடலில் இருந்து பிரித்து வெளியேற்ற சிறுநீரகங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிகிச்சை பெறும் அனைவருக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது என்றாலும், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த ஆபத்தை பெருமளவு குறைக்கலாம்.

சிறுநீரகங்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


1. போதிய அளவு தண்ணீர் குடித்தல்

மருத்துவரிடம் இருந்து பிரத்யேக அறிவுரை வரும்வரை, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் தெளிவான அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது நீர்ச்சத்து சரியாக இருப்பதன் அறிகுறியாகும். சிகிச்சை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க கூடுதல் திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. ரத்த பரிசோதனைகளை தவிர்க்கக் கூடாது

சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய ரத்த பரிசோதனைகள் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு கீமோதெரபி சுழற்சிக்கு முன்பும் கிரியாட்டினின், யூரியா, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும்.

3. அனைத்து மருந்துகள் குறித்தும் மருத்துவரிடம் கூறுங்கள்

நீங்கள் பிற பிரச்சனைகளுக்கு எடுத்துகொள்ளும் அனைத்து மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் பற்றி புற்றுநோய் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.டைக்ளோபினாக், இபுபுரூபன், நேப்ரோக்சன், போன்ற என்.எஸ்.ஏ.ஐ.டி., வலி நிவாரணிகள், சில குறிப்பிட்ட ஆன்டிபயாடிக்குகள், மூலிகை மருந்துகள் மற்றும் சி.டி., ஸ்கேன் செய்யும்போது பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் டை போன்றவை சிறுநீரகத்தை பாதிக்க வாய்ப்பிருப்பதால், பயன்படுத்தும் முன்பு புற்றுநோய் நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும்.

4. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும்

சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு, அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவை கட்டுக்குள் இல்லையென்றால், கீமோதெரபியின் போது சிறுநீரகத்தின் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

5. வாந்தி, வயிற்றுப்போக்கு அலட்சியப்படுத்தக்கூடாது

கடுமையான வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்து, கீமோதெரபி சிகிச்சையின்போது பாதிப்புக்கு வழிவகுக்கும். சில கீமோதெரபி மருந்துகளுக்கு சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஐ.வி., ப்ளூயட்ஸ் ஏற்ற வேண்டியிருக்கலாம். எனவே மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us