தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா?: சாப்பிட வேண்டியதும், கூடாததும்..!

யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா?: சாப்பிட வேண்டியதும், கூடாததும்..!

யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா?: சாப்பிட வேண்டியதும், கூடாததும்..!


ADDED : ஜூன் 28, 2023 03:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2023 03:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில ஆட்டிறைச்சி கல்லீரல்,நெத்திலி மீன், உலர்ந்த பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் போதும் உற்பத்தியாகிறது. இந்த அமிலத்தின் பெரும் பகுதி ரத்ததில் கரைந்து சிறுநீரகத்தை அடைகிறது. சிறுநீரகம் அதை வடிக்கட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

இவை உடலில் அதிகமாக இருந்தால் ஹைப்பர்யூரிசிமியா என்னும் நிலை உண்டாகும்.இவை மூட்டுகளில் படிந்து கீல்வாதம் மற்றும் சிறுநீரக கல்லை உருவாக்கலாம். இதை தவிர எலும்பு, மூட்டு, திசு சேதங்கள்,சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும்.

ப்யூரின்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம். ஆகையால் இந்த அமிலத்தை குறைக்க உணவு கட்டுப்பாடு என்பது அவசியமாகும்.

தவிர்க்க வேண்டியவை


மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை அதிகம் உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இவை ப்யூரினை அதிகரிக்கும்.ஆகையால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் இனிப்பை குறைத்துக் கொள்வது சிறந்தது.

இனிப்பு சுவை அதிகம் கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ளும் போது, அதில் இருக்கும் ப்ரக்டோஸ் என்னும் பொருள் உடலில் யூரிக் அளவை அதிகரிக்க செய்யும். குறிப்பாக அன்னாசி, சப்போட்டா பழங்கள் அதிக சத்துக்களை கொண்டிருந்தாலும், இவை உடலில் யூரிக் அளவை அதிகரிக்க செய்யும்.

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் புட்ஸ், ரெடிமேட் உணவுகள் உள்ளிட்டவை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய உணவுகள்


ஆரஞ்சு, சாத்துக்குடி,தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

காய்கறிகளில் பூசணிக்காய், செள செள, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

எளிதில் செரிமானம் ஆக கூடிய பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பாதாம், வால்நட்ஸ் போன்றவை யூரிக் அமில அளவை குறைக்கும். இவற்றை சாப்பிட்டு வரலாம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியாகும்.

சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us