sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

தொப்பையை வேகமாக குறைக்கும் குடம் புளி ..!

/

தொப்பையை வேகமாக குறைக்கும் குடம் புளி ..!

தொப்பையை வேகமாக குறைக்கும் குடம் புளி ..!

தொப்பையை வேகமாக குறைக்கும் குடம் புளி ..!


UPDATED : ஜன 25, 2023 10:49 AM

ADDED : ஜன 25, 2023 08:23 AM

Google News

UPDATED : ஜன 25, 2023 10:49 AM ADDED : ஜன 25, 2023 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் சமையலில் தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்று புளி. உணவின் சுவையை அதிகரிக்கவும், மருத்துவ குணம் வாய்ந்தாக உள்ளதால் இதைச் சமையலில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இப்படி புளியின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் புளியை விட அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது குடம் புளி.

இந்த குடம் புளி தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கேரள மக்களின் உணவு வகையில் தவிர்க்க முடியாத அங்கமாக இது உள்ளது. மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையும் இந்த புளிக்கு மலபார் புளி, பானைபுளி, கோடம்புளி, மீன்புளி உள்ளிட்ட பலபெயர்கள் உள்ளது. இதன் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

தொப்பை குறைய

Image 1058593
குடம் புளியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளும் போது தொடை மற்றும் தொப்பை சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு குடம் புளியை முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பையைக் குறைக்கும்.

தூக்கமின்மை போக்க

Image 1058598
குடம் புளியின் இலை மற்றும் பழங்களில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளது. இவை ஆழ்ந்த தூக்கத்தை அளிப்பதை உறுதி செய்கிறது. அமினோ அமிலமான டிரிப்டோபனை மெலடோனினாக மாற்றுவதற்கு மூளை செல்களுக்கு உதவுகிறது. இதனால் மூளையை அமைதிப்படுத்தி தூக்கமின்மையைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தருகிறது.

முடி வளர்ச்சி அதிகரிக்க

Image 1058594
குடம் புளியின் இலைகள் அரைத்து, உச்சந்தலை மற்றும் முடியில் தடவி வந்தால் பொடுகு, அரிப்பு ஆகியவற்றைத் தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

பிசிஓஎஸ்(Pcos)

Image 1058595
குடம் புளியைப் பழச்சாறு, ரசம், சூப், ஊறுகாய், சட்னி உள்ளிட்டவையாகச் செய்து சாப்பிட்டு வந்தால் பிசிஒஎஸ் காரணமாகப் பெண்கள் அனுபவிக்கும் மனஅழுத்தம் மற்றும் வலியைக் குறைக்கும். ஹார்மோன் உற்பத்தியைச் சமநிலைப்படுத்தும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

உடல் எடை குறைய

Image 1058597
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் குடம் புளியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து எடை எளிதில் குறைக்கும். இது ஜீரண சக்தியை அதிகரித்து உணவு வேகமாகச் செரிக்க உதவுகிறது. குடம் புளி தோலைச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல்,குடல் மற்றும் கொழுப்பு திசுக்களில் கொழுப்பு சேருவதைக் குறைக்கலாம்.






      Dinamalar
      Follow us