தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/நரம்பு பிடித்துக் கொள்கிறதா?: சரிசெய்வது எப்படி..!

நரம்பு பிடித்துக் கொள்கிறதா?: சரிசெய்வது எப்படி..!

நரம்பு பிடித்துக் கொள்கிறதா?: சரிசெய்வது எப்படி..!


UPDATED : செப் 04, 2023 01:25 PM

ADDED : செப் 04, 2023 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 01:25 PM ADDED : செப் 04, 2023 01:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மில் பலருக்கு நீர்நிலைகளில் இறங்கும் போது, இரவில் தூங்கும் போது, நடக்கும் போது, காலை நீட்டும் போது என திடீரென கால் தசைகள் மற்றும் நரம்புகள் இழுத்து பிடித்துக் கொள்ளும். அப்போது அதிக வலி ஏற்படும். இதற்கு ஆங்கிலத்தில் 'Cramps' என்று பெயர்.

இப்படி அடிக்கடி வருவதால் பலர் இதைப் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. இதுகுறித்து மருத்துவர்களிடம் சென்று கூட ஆலோசனை செய்வது கிடையாது. ஏன்னென்றால் எப்போதாவது தானே வருகிறது என்ற அலட்சியம் தான் காரணம். கை மற்றும் கால்களில் இதுபோன்று நரம்பு இழுக்கும் பிரச்னைகளுக்கு 'கால்சியம் குறைபாடு' தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நமது உடம்பில் உள்ள தசைகள் திறம்பட செயல்பட எரிசக்தி அவசியமாகும். இந்த எரிசக்தியை தசைகளுக்கு கொடுப்பது கால்சியம். தசைகளுக்கு போதிய எரிசக்தி கிடைத்தால் மென்மையாக இருக்கும், பற்றாக்குறையின் போது இறுக்கமாக மாறும். குறிப்பாக கால்சியத்தின் அளவு குறையும் போதும், குளிர்ச்சியான சூழலின் போதும் தசைகள் இழுத்துப்பிடிக்கின்றன. இந்த பிரச்னையை சரிசெய்ய கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

கால்சியம் நிறைந்த உணவுகள்

Image 1165113
தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் பால் சாப்பிடலாம்.

வாரத்திற்கு இருமுறை ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம்

அடிக்கடி உணவில் நெய் சேர்த்து கொள்ளலாம்.

நிலக்கடலை தினமும் சாப்பிடலாம்.

கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெற்றிலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை

Image 1165112
உடம்பை எப்போது சூடாக வைத்து கொள்ள வேண்டும்.

குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்ட உடலமைப்பை கொண்டவர்கள் கம்பளி ஆடைகளை தினமும் அணிந்து கொள்ளலாம்.

ஏசியில் உறங்கி பழகியவர்கள் இரவில் கை, கால்களை மறைந்து கதகதப்பாக வைத்துக் கொண்டு உறங்கலாம்.

நரம்பு பிடிப்பை சரிசெய்ய

Image 1165111
நரம்பு பிடித்த இடத்தில் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொண்டுக்க வேண்டும்.

மெதுவாக நீவி விட வேண்டும்.

நரம்பு பிடித்த இடத்தில் மெதுவாக இழுத்து கொடுப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

நரம்பு மற்றும் தசை பிடித்த இடத்தில் கைகளை நன்றாக தேய்த்து ஒத்தடம் கொடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us