UPDATED : ஜூன் 09, 2022 09:31 AM
ADDED : ஜூன் 09, 2022 09:24 AM

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சிரிப்பின் முக்கியத்துவம் குறித்து அழகாக, அழுத்தமாக கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். சிரிப்பும், மகிழ்ச்சியும் நோயாளி குணமடைவதை விரைவுப்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். எனவே தினமும் நாம் சிரிக்கக் கற்றுக் கொண்டால் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியும் பெறலாம். சிரிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் இதோ...
![]() |
* மனம் விட்டு சிரிக்கும் போது நுரையீரல்கள் முழுமையாக விரிவடைந்து, போதியளவு ஆக்சிஜன் உடலுக்கு கிடைக்கிறது.
* நன்றாக சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது.
* சிரிப்பதால் நம்முடைய மூளையில் உள்ள எண்டோர்பின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் நம்முடைய உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
![]() |
* சிரிக்கும் போது இதயத்துடிப்பு சீராக இருக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
* தினமும் வயிறு குலுங்க 10 நிமிடங்கள் சிரித்தால் அட்ரினல் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படும். இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
* சிரிக்கும் போது மூளையின் அடியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் மூளையில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு மூளை புத்துணர்ச்சி அடைகிறது.
![]() |
* செரிமானம் நன்றாக நடப்பதால் குடல் சார்ந்த பிரச்சனைகள் தீர்கிறது. மலச்சிக்கல் குறைய வாய்ப்புள்ளது.
* ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'இம்மியூனோ குளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு
சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.
![]() |
* நன்றாக சிரித்து கலகலப்பாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. உடலில் தேவையில்லாத சதை உருவாகாது. எனவே, சிரிப்பதால் உடல் எடையைக் கூட குறைக்க முடியும்.
எனவே, எவ்வித செலவும் இல்லாமல் உடலும், மனமும் ஆரோக்கியம் பெற இப்போதே சிரிக்கத் துவங்குங்கள்.




