/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கொழுப்பு கட்டிகள் கரைய இதை செய்யுங்க
/
கொழுப்பு கட்டிகள் கரைய இதை செய்யுங்க
UPDATED : ஜூன் 18, 2022 08:52 AM
ADDED : ஜூன் 17, 2022 07:51 PM

உடலில் சிலருக்கு கொழுப்பு கட்டிகள் ஆங்காங்கே இருப்பதை லிபோமா (Lipoma) என்றழைப்பர். உருண்டையான வடிவில் தோலின் உட்பகுதியில் வளர்ச்சி பெற்ற கொழுப்பு தான் இது. மரபணு, அதிகப்படியான கொழுப்பு போன்றவற்றால் இவை வளர்ச்சி பெறும். கைகள், கழுத்து, அக்குள் என உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம்.
![]() |
1. காட்டன் துணி ஒன்றில் கல் உப்பை வைத்து கட்டி கொள்ள வேண்டும். சிறிதளவு நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெயை தோசை கல்லில் ஊற்றி சூடேற்றி, அதில் துணியை வைத்து தோய்த்து, உங்களுக்கு ஏற்ற வகையில் இலகுவான சூட்டில் எடுத்து, கொழுப்பு கட்டிகள் மேல் ஒத்தடம் தர வேண்டும். தினமும் ஒத்தடம் செய்து வர கொழுப்பு கட்டிகள் கரையும்.
2. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் எடுத்து கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து கொள்ளவும். நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொழுப்பு கட்டிகள் மேல் தடவி வரலாம். தொடர்ச்சியாக இதனை செய்து வர கட்டிகள் கரையும்.
3.கொழுப்பு கட்டிகள் கரைய மூலிகை மருந்தான, கொடிவேலி எண்ணெயை பயன்படுத்தலாம். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி, கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் சில நாட்களில் கட்டிகள் மறைய துவங்கும்.
4. உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்குவதால் கூட கொழுப்பு கட்டிகள் தோன்றலாம். எனவே இயற்கை உபாதைகளை எப்போதும் அடக்குதல் கூடாது. வயிற்றை தூய்மையாக வைத்திருப்பதோடு, அன்றாடம் ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்துமிக்க பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். உரிய இடைவெளியின் உண்ணாமல் விரதம் மேற்கொண்டாலும், கொழுப்பு கட்டிகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும்.