தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சத்தான உணவு அவசியம்...!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சத்தான உணவு அவசியம்...!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சத்தான உணவு அவசியம்...!


UPDATED : ஜூன் 22, 2022 12:57 PM

ADDED : ஜூன் 22, 2022 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2022 12:57 PM ADDED : ஜூன் 22, 2022 12:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சத்தான உணவு முறை முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கலோரி, ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சீரான உணவு தேவைப்படுகிறது. ஆனால் போதிய கலோரிகள் கிடைக்காததால் ஒருசில குழந்தைகள் எடை குறைவாக காணப்படுகின்றனர். குழந்தைகளின் வயதுக்கேற்ப எடையும், உயரமும் இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை அறியலாம். ஒருசில குழந்தைகள் சாக்லேட், கேக் மற்றும் இனிப்பான உணவு வகைகளை சாப்பிடும் போது சீரான எடையுடன் இருப்பர். ஆனால் ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிப்பது முக்கியமானது. எனவே குழந்தைகளின் எடையை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு முறைகளை பார்க்கலாம்.

சரிவிகித உணவு அவசியம்

Image 962978
தினமும் குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் அடிப்படையில் உணவைத் தர வேண்டும். முடிந்தளவு தானிய வகை உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். பால் அல்லது பால் பொருட்களான பனீர், தயிர் மற்றும் சோயா பானங்களை தரலாம். பாலில் கூடுதலாக சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் விரைவில் விரும்பிக் குடிப்பர் என்பதற்காக சர்க்கரையை அள்ளிக் கொட்டக் கூடாது.

பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை, இறைச்சி மற்றும் பிற புரதச்சத்துள்ள உணவை சாப்பிடலாம். வாரம் இருமுறை மீன் சாப்பிடத் தர வேண்டும். அதில் சால்மன், கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் சத்துள்ள மீன்களுக்கு முக்கியத்துவம் தரலாம். ப்ரெஷ்ஷான பழ ஜூஸ்களை அடிக்கடி குடிக்க வேண்டும்.

சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

Image 962973
வேலைப்பளு, நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களால் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆரோக்கியமான, சமச்சீரான உணவை தயாரிக்க ஒருசிலரால் முடியாது. குழந்தைகளுக்கு தேவையான கலோரி கிடைக்காமல் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். காலை மற்றும் இரவு நேரங்களில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முயற்சியுங்கள். வேடிக்கை மற்றும் விளையாட்டாக சாப்பிடும் போது அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். அப்போது குழந்தைகள் சரியாக சாப்பிடுகிறார்களா, விருப்பமான உணவு எது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

உங்கள் குழந்தை மதிய உணவை சரியாக சாப்பிடுகிறார்களா என அவ்வப்போது வகுப்பு ஆசிரியர் அல்லது பொறுப்பாளரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். பழங்கள் அல்லது காய்கறி சாலட், முட்டை, தயிர், பருப்பு, சோள வகை உணவுகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தினசரி உணவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

Image 962974
கடைகளில் வாங்கக்கூடிய கலர்புல்லான மற்றும் ஆயில் வகை உணவுகளை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமானதாக, அதேநேரம் சத்தானதாக மாலை நேர டிபன் இருப்பது அவசியம். முட்டை, காளான், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், சுரைக்காய், பனீர் உட்பட பல்வேறு கால்சியம், புரதச் சத்துள்ள பொருட்களை கொண்டு வீட்டிலேயே எளிதாக ஸ்நாக்ஸ் செய்யலாம்; இதை சாப்பிடும்போது குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்கள் குழந்தையை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

Image 962977
உங்களின் குழந்தை எடைக்குறைவாக இருப்பினும், உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் ஆக்டிவாக இருக்கும் போது அவர்களுக்கு வலுவான ஆரோக்கியமான எலும்புகள், தசைகள் உருவாகக்கூடும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.

எனவே, நீங்கள் எவ்வளவு பிஸியான ஆளாக இருந்தாலும், வேலையை சற்று ஒதுக்கிவைத்து, உங்கள் குழந்தையின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு கிடைக்கும்போது, அவர்களின் எடை மற்றும் வளர்ச்சி மேம்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம். டாக்டரிடம் அவ்வப்போது எடை மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us