sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ள உணவுகள்

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ள உணவுகள்

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ள உணவுகள்


UPDATED : ஜூலை 30, 2022 11:56 AM

ADDED : ஜூலை 30, 2022 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2022 11:56 AM ADDED : ஜூலை 30, 2022 11:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலில் உள்ள செல்களை பாதுகாத்து நோய்களை கட்டுப்படுத்துவதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சரிவிகித உணவுடன் பழங்களைச் சேர்த்துக் கொண்டால் போதியளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு கிடைக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்றவற்றில் இது அதிகளவில் காணப்படுகிறது. இந்த சத்துள்ள காய்கறிகள், பழங்களை சரிவர சாப்பிட உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

டைப் - 2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்றவற்றைத் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியத்துடன் சருமமும் பொலிவடையும். எனவே, காய்கறிகள், கீரைகள், மற்றும் பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது டாக்டர்கள், டயட்டீசியன்களின் அட்வைஸாக உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள் குறித்துப் பார்க்கலாம்.

Image 976477


ஊதா நிற முட்டைக்கோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவுகிறது.

Image 976481


சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதை உரித்த உடனே சாப்பிட்டால் சத்துகள் முழுமையாக கிடைக்கும்.

Image 976479


கொய்யா பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன. இதை சாப்பிட இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

Image 976474


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை எனக் கூறுவர். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளன.

Image 976476


பீட்ரூட்டில் இரும்பு, நார்ச்சத்து, பொட்டசியம் உட்பட பல்வேறு உயிர்ச்சத்துகள் உள்ளன. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

Image 976480


பச்சைக்கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஜீயாக்சாந்தின் மற்றும் லுடீன் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image 976478


ஊதா மற்றும் சிவப்பு நிறத் திராட்சை வகைகளில் வைட்டமின் சி, செலினியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. இவற்றை சாப்பிடுவதால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

Image 976482


ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிப் பழங்களில் புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, கழிவுகளாக மாற்றி வெளியேற்றுகிறது. ராஸ்பெரியில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களை எதிர்க்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Image 976475


பீன்ஸில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால் உணவில் அவ்வப்போது சேர்க்கலாம். மேலும், வெள்ளைப்பூண்டு, தக்காளி, அவகேடோ, கிவி பழம், ப்ராக்கோலி, குடைமிளகாய் போன்ற பலவற்றிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us