/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
எலும்பு மூட்டு பிரச்னைக்குத் தீர்வு கூறும் தட்டு வர்மம்..!
/
எலும்பு மூட்டு பிரச்னைக்குத் தீர்வு கூறும் தட்டு வர்மம்..!
எலும்பு மூட்டு பிரச்னைக்குத் தீர்வு கூறும் தட்டு வர்மம்..!
எலும்பு மூட்டு பிரச்னைக்குத் தீர்வு கூறும் தட்டு வர்மம்..!
UPDATED : ஆக 29, 2022 05:40 PM
ADDED : ஆக 29, 2022 05:34 PM

சித்த மருத்துவத்தில் வர்மக் கலை மிகப் பிரபலமான மருத்துவ முறைகளுள் ஒன்று. வர்மம் மூலமாக உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலமாக நோயை குணப்படுத்த, சித்த வைத்திய நிபுணர்கள் அந்த காலத்தில் பல வித வர்ம வித்தைகளை ஓலைகளில் எழுதிச் சென்றனர்.
வர்மங்களில் பலவித வர்மங்கள் இருந்தாலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் தட்டு வர்மமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலமாக சரியான நரம்புகளைத் தட்டும்போது எலும்பு நோய்களுக்குத் தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி குறையும் நோயான ஆஸ்ட்ரியோபோரோஸிஸ் சிகிச்சையில் தட்டு வர்மம் முக்கியப் பங்காற்றுகிறது.
வர்ம சிகிச்சைக்கு பல ஆண்டு அனுபவம் வேண்டும். மேலும் தவறான முறையில் வர்ம சிகிச்சை செய்தால் நோயாளி கடுமையாக பாதிக்கப்படுவார். எனவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவமனை மருத்துவர்களிடம் எலும்பு நோய்களுக்கு வர்மம் மூலமாக சிகிச்சை பெறுவது நல்லது.