தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கர்ப்ப காலமும்.. வெள்ளைப்படுதலும்...!

கர்ப்ப காலமும்.. வெள்ளைப்படுதலும்...!

கர்ப்ப காலமும்.. வெள்ளைப்படுதலும்...!


UPDATED : செப் 14, 2022 06:50 PM

ADDED : செப் 14, 2022 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2022 06:50 PM ADDED : செப் 14, 2022 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்பம் என்பது பலருக்கும் உற்சாகமான, சாகசமான ஒன்றாகும். ஒரு உயிரில் இருந்து இன்னொரு உயிரை உலகுக்கு கொண்டு வருவதால், பயம், பாசம், குழப்பம், சோர்வு, பிரமிப்பு, கவலை, உற்சாகம் என பலவிதமான உணர்வுகள் இருப்பது இயல்பான ஒன்று. கர்ப்ப காலத்தில் உடலிலும் பலவிதமான மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இயல்பானது எது? எவை பிரச்னைக்கு வழிவகுக்கும் என கர்ப்பிணிகள் பலருக்கும் பலத்த குழப்பம் உள்ளது. முதல் கர்ப்பம் எனும்போது சிறிய பிரச்னைகளையும் பூதாகரமாகவே பலரும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் உண்டானால் டென்ஷனுக்கு அளவே இல்லை. எனவே, கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் (Vaginal Discharge) குறித்து பார்க்கலாம்.

வெள்ளைப்படுதல் என்பது கர்ப்பப்பை வாயில் உள்ள ஒருவித பாக்டீரியாக்கள், இறந்த செல்களை வெளியேற்ற உதவும் இயற்கையான ஒரு திரவம். பாக்டீரியாக்களிடம் இருந்து பிறப்புறுப்பை பாதிக்கப்படாமல் பாதுகாக்க ஒருவித அமிலத்தை காரத்தன்மையாக மாற்றி திரவமாக வெளியேற்றுகிறது. இது பெண்களுக்கு சாதாரணமான ஒன்று; பதின்ம வயதில் துவங்குகிறது. இது பெண்களின் இனப்பெருக்க உறுப்பை சுத்தமாக வைக்கவும். தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமலும் இருக்க உதவுகிறது. நிறம் மாறும் போது நோய்த்தொற்றின் நிலையை உணரலாம்.

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்



கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமான ஒன்று என்பதால் பயப்பட வேண்டியதில்லை; ஆனால் அதன் தன்மைகள் குறித்து அறிவது அவசியமாகும். கர்ப்பிணிகளுக்கு வெள்ளைப்படாது என்பது பலரின் தவறான கணிப்பாகும். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக பெண்களின் மாதவிடாய் சுழற்சி முழுவதும் வெள்ளைப்படுதல் குறைவாகவே இருக்கும்.

ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன்கள் அதிகளவில் உருவாகும். கருப்பை வாயில் ஏற்படும் மாற்றங்கள் வெள்ளைப்படுதலிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு சுவர் மென்மையாவதால், உடலில் அதிகப்படியான வெள்ளைப்படுதலை உருவாக்கி, தொற்று நோயை தவிர்க்க உதவுகிறது. இது கருப்பையில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பானதே. எனவே, கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் ஒருவித பிசுபிசுப்பு தன்மையுடன், சிறிது அசவுகரியத்தை அளித்தாலும், ஆபத்து எதுவும் இல்லை. மேலும், நாளடைவில் குழந்தையில் தலை கருப்பை வாயில் அழுத்தப்படுவதாலும், வெள்ளைப்படுதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Image 996488


சாதாரண நிலையைப் போன்றுதான் கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் தெளிவாக இருக்க வேண்டும்; பால் போன்று மெலிதாகவும், சிறிது வாடையுடனும் இருக்கலாம். மஞ்சள், பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் வந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை, தாய் இருவருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும், கர்ப்ப கால மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம். கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலகட்டத்தின் இறுதியில் வெள்ளைப்படுதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கர்ப்பத்தின் இறுதியில் வெள்ளைப் படுதல் தடிமனாகவும், சளி போன்றும் ஒரு சிலருக்கு மிக குறைவாக ரத்தத் துளிகளுடனும் வரும். இது நிறைமாதத்தை குறிக்கும் அறிகுறிகளாகும்.

என்னென்ன செய்யலாம்?


வாசனை சோப்புகள் மற்றும் திரவியங்கள், டிஸ்யூ பேப்பர்களை தவிர்த்து, சாதாரண தண்ணீரை பயன்படுத்தி பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் தரமான மற்றும் சிறிது தடிமனான உள்ளாடைகளை பயன்படுத்தலாம்; அப்போது திரவமானது அந்த உள்ளாடைகளின் தன்மையால் உறிஞ்சப்படுவதால் உலர்வாகவும், சுத்தமாகவும் இருப்பதை போன்று உணரலாம். கர்ப்ப காலத்தில் முடிந்தளவு டேம்பான்களைத் தவிர்க்கலாம்.

இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் ரக உள்ளாடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். கழிப்பறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க, தயிர் போன்ற புரொபயாட்டிக் உணவுகளை சேர்க்கலாம். பாலியல் நேரத்தில் பாதுகாப்புடனும், சுத்தமாகவும் இருப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us