/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
குதிகால் வலியிலிருந்து விடுபட சில வழிகள்!
/
குதிகால் வலியிலிருந்து விடுபட சில வழிகள்!
UPDATED : அக் 12, 2022 04:07 PM
ADDED : அக் 12, 2022 02:46 PM

காலையில் காலை தரையில் வைக்க விடாமல் செய்வது குதிகால் வலி. மூட்டு வலி முடக்கி போடுவது போல், குதிங்கால் வலியும் தற்போது பலரையும் வாட்டி வதைகிறது. இது பொதுவாக முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதுவும் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வலி எதனால் வரும்:
![]() |
குதிகால் எலும்பிலிருந்து 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும். சிலருக்குக் குதிகால் பகுதியில் சிறிதளவு எலும்பு வளரக்கூடும் இதை 'கால்கேனியல்ஸ்பர்' (Calcaneal Spur) என அழைப்பர். இதனாலும் குதிகால் வலி வரலாம்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானாலும் வலி வரும். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல்நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம். மேலும் சுளுக்கு, எலும்பு முறிவு, எதிர்வினை மூட்டுவலி போல வேறு சில காரணங்களாலும் குதிகால் வலி வரும்.
யாருக்கு வரும் :
• தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள், நின்று பணி செய்யும் போலீஸ், ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு வரும்.
• ஓட்ட பயிற்சி, ஜிம் பயிற்சி எடுக்கும் போது 'வார்ம் அப்' (Warmup) செய்யாமல் செய்தால் குதிகால் வலி ஏற்படும்.
• தாய், தந்தைக்கு இந்த பிரச்னையிருந்தாலும் அவர்களது பிள்ளைகளுக்கு வரக்கூடும்.
• ஹை ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பு அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பாதிப்புகள்:
தாங்க முடியாத வலி, குதிகால் சிவத்தல், வீக்கம் நிக்க முடியாத நிலை போன்றவை இதன் அறிகுறிகள். குதிகால் வலி வந்தால், நடைபயிற்சி, நின்று அல்லது நடந்து செய்யக்கூடிய எந்த செயலையும் செய்ய முடியாமல் வலியை தரும். மேலும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு, இது மேலும் சுமையாகும்.
வலியிலிருந்து மீள என்ன செய்யலாம்:
![]() |
• எந்த வலிக்கும் முதல் தீர்வு ஓய்வு தான். ஓய்வு இல்லாமல் நீன்று கொள்ளவதால் தான் குதிகால் வலி அதிகமாகும்.
• வலிபொருக்க முடியாமல் இருக்கும் சமயத்தில் சரியான ஓய்வு மற்றும் எதிர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது தானாகவே குணமடையும்.
• காலின் குதிபாகத்தில் கூடுதல் பஞ்சு மற்றும் பாத வளைவுகளை தாங்கிப் பிடிக்கும் வகையான காலணிகள் அணிவது நல்ல பலன் தரும். அதுமட்டுமல்லமல் குதிகால்கள் வலியை போக்கும் 'ஆங்கிள் சாக்ஸ்' (Pain relief AnkleSocks) பயன்படுத்தலாம்.
• குதிகால் வலி வழக்கமாக ஏற்படும் போது பாதத்தை முன்னும் பின்முமாக 'ஸ்ட்ரெச்சிங்' (leg streching) பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 20 முறை செய்யலாம்.
• குதிகால் வலி குணமாக மிதமான சூட்டில் வெந்நீர் சுடவைத்து அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, 10 நிமிடம் வரை உங்கள் கால்களை வைத்திருந்தால் குதிகால் வலி குணமாகும். வலி இருக்கும் போது தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
• குதிகால் வலி இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகலாம்.