தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/ஐவிஎஃப் மூலம் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன?

ஐவிஎஃப் மூலம் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன?

ஐவிஎஃப் மூலம் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன?


UPDATED : அக் 14, 2022 05:47 PM

ADDED : அக் 14, 2022 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2022 05:47 PM ADDED : அக் 14, 2022 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று குழந்தைப்பேறு என்பது பல தம்பதிகளுக்கு நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைக்கும் அரிய வரம்போல மாறிவருகிறது. மாறிவரும் காலநிலை, துரித உணவுப் பழக்கம், மது, புகை உள்ளிட்ட தவறான பழக்கங்கள் உள்ளிட்டவற்றால் ஆண்/பெண் ஆகிய இருவருக்கும் பாதிப்பு உண்டாவதால் குழந்தை பெறும் வாய்ப்பு குறைகிறது. இதன் காரணமாக இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஐவிஎஃப் சென்டர் என்னும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகத் துவங்கிவிட்டன. லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கும் இந்த மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக வளர்ந்து வருகின்றன.

செயற்கை கருத்தரிப்பு முறையில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன எனத் தெரியாமல் பல தம்பதிகள் திருமணமாகி ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள்ளாகவே ஐவிஎஃப் சென்டர்கள் நோக்கிப் படையெடுக்கச் சென்றுவிடுகின்றனர். செயற்கை கருத்தரிப்பு முறையில் உள்ள பிரச்னைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

Image 1010642


ஆணின் விந்தணுவை பெண்ணின் கருமுட்டைக்குள் செயற்கையாக ஊசி மூலம் உள்ளே செலுத்தி அதனை பெண்ணின் கருப்பையில் வைத்து வளர வைக்கும் முறைதான் ஐவிஎஃப். பெண்களுக்கு கருமுட்டைகள் போதுமான அளவு வெளியேறவில்லை என்றாலோ அல்லது ஆண்களுக்கு ஒரு சொட்டு விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்குக் குறைவாக இருந்தாலோ ஐவிஎஃப் மேற்கொள்ள மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முறை மூலமாகவும் கரு உருவாகவில்லை என்றால் கடைசி முயற்சியாக வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

ஐவிஎஃப் முறையில் உள்ள பெரிய பிரச்னை இரட்டைக் கரு உருவாகுதல். ஒரு விந்தணு கருமுட்டைக்குள் சென்றால் அது வளர்ச்சிபெற வாய்ப்பு குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் இரு விந்தணுக்களை செலுத்துவது வழக்கம். இதனால் கரு உருவாக வாய்ப்பு அதிகம். ஆனால் இந்த முறையில் இரண்டு விந்தணுக்களும் கருவாக மாறி வளர்ந்துவிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்கலாம்.

Image 1010643


இதனால் என்ன பாதிப்பு என நினைக்கலாம். இதனால் குறிப்பிட்ட கர்ப்ப காலத்துக்கு முன்னர், குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் சத்துகள் சரிசமமாகப் பகிரப்படுவதால் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

ஹுயுமன் கோரியோனிக் கொனடோட்ரோப்பின் (human chorionic gonadotropin) என்கிற மருந்து ஐவிஎஃப்பில் பயன்படுத்தப்படுவதால் பெண்களுக்கு கருப்பை வீக்கம், வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சாதாரண பிரசவத்தின்போது கரு கலைதல் ஏற்பட எவ்வாறு 15-25 சதவீத வாய்ப்பு உள்ளதோ அதேபோல ஐவிஎஃப் பிரசவத்தின்போதும் வாய்ப்புள்ளது.

ஊசி மூலம் பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகள் வெளியே உறிஞ்சப்படும். இதனால் ரத்தம் வடிதல், பெண்ணின் சிறுநீர்ப்பை, மலக்குடல் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐவிஎஃப் செய்துகொள்ளும் பெண்ணின் வயது 35-க்கு மேல் இருக்கும்பட்சத்தில் சத்து குறைபாடு காரணமாக குழந்தைக்கும் பிறவிக் குறைபாடு ஏதாவது ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கரு வளர கொடுக்கப்படும் சில மருந்துகள், பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும் என மருத்துவத் துறையால் கருதப்பட்டது. ஆனால் நவீன ஐவிஎஃப் முறை காரணமாக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை என மாற்றுக்கருத்தும் மருத்துவ நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது.

Image 1010644


ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற குறைந்தபட்சம் 5-7 லட்ச ரூபாய் வரை செலவாகும். பெருளாதாரப் பிரச்னையாலும், தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிடுவதாலும், சமூகத்தின் ஏளனப் பார்வையாலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசசனையுடன் ஆரோக்கிய சூழல், உணவுடன் குழந்தைக்கான சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் ஐவிஎஃப் முறையால் குழந்தை பெறும்போது ஏற்படும் சிககல்கள் தவிர்க்கப்படும் வாய்ப்புண்டு. எனவே, ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் வைத்தே எந்த சிகிச்சை முறையையும் முறையாகப் பின்பற்றினால் சிக்ககளின் தீவிரத்தைத் தவிர்க்கலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us