sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/தூங்கி எழுந்ததும் உடல் வலி உண்டாவது ஏன்?

தூங்கி எழுந்ததும் உடல் வலி உண்டாவது ஏன்?

தூங்கி எழுந்ததும் உடல் வலி உண்டாவது ஏன்?


UPDATED : அக் 24, 2022 12:00 AM

ADDED : அக் 23, 2022 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2022 12:00 AM ADDED : அக் 23, 2022 05:16 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது அன்றாடப் பணி நாட்களில் சில நாட்கள் மிக சோர்வாகக் காணப்படும். அதீத வேலைபளு காரணமாக ஓய்வெடுக்க உடல் ஏங்கும். மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்த சாப்பிட்டுத் தூங்கினால் உடல் அயர்ச்சி குறைந்து காலையில் புத்தணர்ச்சியுடன் எழலாம் எனத் தோன்றும். ஆனால் 30 வயதைக் கடந்த பலருக்கு இது நடப்பதில்லை. காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் தோள்பட்டை, கை, கால், தொடை, கீழ் முதுகு உள்ளிட்ட உடற்பகுதிகளை கனமாக உணருவீர்கள்.

படுக்கையில் இருந்து பல் துலக்க எழுந்து நடக்கும்போது பாதங்கள் கூட லேசான வலியில் அவதியுறும். தூங்கி எழும் வேளையில் புத்துணர்ச்சிக்கு மாறாக இவ்வாறாக உடல் சோர்வடைவது ஏன் என பலருக்குக் கேள்வி எழலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை என்னென்ன என ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

Image 1014875


தூங்கி எழும்போது உடலில் நம்மால் இயக்கக் கூடிய தசைகளில் வலி ஏற்பட முக்கியக் காரணம் தூங்கும் நிலை. தவறான நிலையில் தலை வைத்துப் படுப்பது, கோணல் மாணலாக உடலை வளைத்துத் தூங்குவது உள்ளிட்டவை உடற்தசைகளுக்குப் பல மணிநேரம் அழுத்தம் கொடுக்கும். இதன்காரணமாக வலி ஏற்படலாம். சரியான தலையணை மற்றும் படுக்கையைத் தேர்வு செய்து சரியான நிலையில் தூங்குவதால் தசைகளுக்கு சரிசமமாக அழுத்தம் பகிரப்படும். இதனால் ஒரு பகுதியில் மட்டும் அழுத்தம், வலி ஏற்படாது.

மிகவும் கடினமான அல்லது மிக மிருதுவான மெத்தையைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். இரண்டுமே உடல் தசைகளுக்குத் தொல்லை தருபவை. மித கனமுள்ள மெத்தையே சிறந்தது.

Image 1014873


அதீத உடற்பருமன் தசைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. ஸ்லீப் ஆப்னியா எனப்படும் குறட்டைத் தொல்லை உள்ளிட்ட சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு தசை வலி ஏற்படலாம். இதற்குப் பெரும்பாலும் உடற்பருமனே காரணமாக உள்ளது.

Image 1014874


ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட பாதிப்பு கொண்ட வயோதிகர்களுக்கு தசை வலி ஏற்படலாம். இரண்டையுமே இவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் தசை வலியில் இருந்து தப்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us