sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்


UPDATED : நவ 07, 2022 01:47 PM

ADDED : நவ 07, 2022 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2022 01:47 PM ADDED : நவ 07, 2022 01:39 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொலஸ்ட்ரால் அதிகரித்தாலே உடலில் எதோ ஒரு பாதிப்பு வரக்கூடும். குறிப்பாக இதய செயல்பாட்டில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்... வந்தால் சர்க்கரை, பிபி கூட வரவாய்ப்புண்டு. உடலில் இரண்டு வகை கொலஸ்ட்ராலில் நல்லது பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை. கெட்ட கொலஸ்ட்ரால் தான் உடலின் ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ராலில் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பது எல்டிஎல் (Low-density lipoprotein). இது இதய ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் ஒட்டும் தன்மை உடையது. அதனால் கெட்ட கொலஸ்ட்ராலாக கருதப்படுகிறது. ஹெச்டிஎல் (High-density lipoprotein), கொலஸ்ட்ராலில் அடர்த்தி அதிகமானது, இது ரத்தக் குழாயின் உட்பகுதியில் ஒட்டாமல் புரதத்தை எடுத்து செல்ல உதவும். இதனால் உடலுக்குத் தேவையான சத்தி, ஆற்றல் முழுமையாக பெறமுடியும். இதனாலேயே இதை நல்ல கொலஸ்ட்ரால் என்கின்றனர்.

நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எப்போதும் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமற்ற ஜங்க் புட்டை குறைத்து சரிவிகித சத்தான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் எல்டிஎலை அதிகப்படுத்த முடியும்.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மெலிந்து காணப்படுபவர்களுக்கும் கூட, மாறி போன உணவு பழக்க முறையால் தற்போது கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே முதலில் உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கண்டறியுங்கள். அதை அறிந்து கொண்டால், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் எளிதில் முடியும்.

ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்:


Image 1021768


நட்ஸ் மற்றும் சீட்ஸ் : ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பாதாம், வால் நட், போன்ற பருப்பு வகைகள், மற்றும், பூசணி, வெள்ளரி விதைகள் போன்றவைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஸ்நாக்ஸ் போல் இதை சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.

முழு தானியங்கள் : முழு தானியங்களை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. குறிப்பாக சிறுதானியங்களான தினை, கேழ்வரகு, கம்பு, சாமை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

பழங்கள்: நார்ச்சத்து அதிகம் உள்ள பச்சை காய்கறிகள் மற்றும் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் போன்ற பருவகால பழங்களை சாப்பிடலாம். உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம். நிரிழிவு நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைத்த பழங்களை அளவோடு சாடப்பிடலாம்.

பூண்டு : பூண்டில் அலிசின் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. தினமும் காலையில் இரண்டு பல் பூண்டை தோல் உரித்து பச்சையாக சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

மீன் சாப்பிடுங்கள்: அசைவ பிரியர்கள் அதிக அளவில் மீனை எடுத்துக்கொள்ளலாம். மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

எதை தவிர்க்கலாம்:


Image 1021767


*சிப்ஸ், பக்கோடா, முறுக்கு போன்ற பொறித்த உணவை தவிர்க்கவும்.

*பொறித்த மீன்களைவிடவும் குழம்பில் சேர்த்த மீன்களை உண்ணலாம்

* முட்டையின் மஞ்சள் கரு தவிர்க்கலாம்.

* ஆட்டிறைச்சி, இறாலில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது

* மது அருந்தவதை தவிர்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us