தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/மருத்துவ குணங்கள் தூக்கலாக இருக்கும் நூக்கல்!

மருத்துவ குணங்கள் தூக்கலாக இருக்கும் நூக்கல்!

மருத்துவ குணங்கள் தூக்கலாக இருக்கும் நூக்கல்!


UPDATED : செப் 29, 2023 07:37 PM

ADDED : செப் 29, 2023 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2023 07:37 PM ADDED : செப் 29, 2023 07:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நூக்கல் காயில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

நூக்கலில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிகமாக உணவில் யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இதில் தான் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளது. நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூக்கலில் உள்ள வைட்டமின் கே இதய பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது. நூக்கல் இலை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தநீர் ஆகியவை வெளியேற்றுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Image 1176455


நூக்கல் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கும். மேலும் வயிற்று பிரச்சனைகள், மற்றும் வயிற்றுப்புண்கள் உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்த்து அழிக்க கூடியது.

இந்த நூக்கலை சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்தத்தின் அளவை சரியாக வைத்து உடல் எடையையும் குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Image 1176456


மேலும் நூக்கலை சாப்பிடுவதால் குடல் நாளங்கள் உறுதிப்படும், எலும்புகள் உறுதியாகும்.

குழந்தை பெற்ற பெண்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

இந்த காயில் மற்றும் இலையிலும் அதிக அளவிலான ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் இதயத்தை பாதுகாப்போடு வைத்து மாரடைப்பு பிரச்சனை வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை நூக்கல் இரு மடங்காக அதிகரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us