/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கழுத்து வலி நீங்க சில டிப்ஸ்...
/
கழுத்து வலி நீங்க சில டிப்ஸ்...
UPDATED : ஏப் 15, 2023 06:57 PM
ADDED : ஏப் 15, 2023 06:52 PM

கழுத்து வலி இல்லாதவர்களே இன்று இல்லை என்று சொல்லுமளவுக்கு, பெரும்பாலானோர் கழுத்து வழியால் அடிக்கடி அவதிப்பட நேர்கிறது. இது இன்றைய நவீன வாழ்வியல் முறையின் விளைவாகும். நீண்ட நேரம் ஒரே இடத்தில், தவறான தோற்றநிலையில் உட்கார்ந்திருப்பது, வண்டி ஓட்டுவது, குனிந்தபடியே படிப்பது, போன் பார்ப்பது என பல வேலை செய்வதால் கழுத்து வலி ஏற்படுகிறது. மேலும், இதனால் தோள்பட்டை மற்றும் கழுத்து சேரும் இடத்தில், முதுகின் மேல் பகுதியில் வலி ஏற்படுகிறது. நீங்கள் கழுத்து வலியால் அவதிப்பட்டால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க.
![]() |
நொச்சி இலையை நல்லெண்ணெயில் நன்கு காய்ச்சி, தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் குளித்தால் கழுத்து வலி நீங்கும்.
கண்டந்திப்பிலியை பொடியாக்கி, பாலை காய்ச்சி, அத்துடன் கண்டந்திப்பிலி பொடி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் கழுத்து வலி உடனே நீங்கும்.
ஒரு பவுலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிிர் வினிகர், அதே அளவு சமமாக தண்ணீர் எடுத்து ஒரு பேப்பர் டவலை (டிஷு) அந்த கலவையில் நனைத்து, வலி இருக்கும் இடத்தில் 1 அல்லது 2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, ஒரு துணியில் எப்சம் உப்பை கட்டி, தண்ணீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு கழுத்து வலி ஏற்பட்டால் நீங்கள் உட்காரும் மற்றும் படுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
நீண்ட நேரம் வண்டி ஓட்டுவதை தவிருங்கள்.
குனிந்தபடியே போன் பார்ப்பதை தவிருங்கள்.
மன அழுத்தத்தினாலும் கழுத்து வலி ஏற்படும். உங்களுக்கு எதனால் மன அழுத்தம் என்று கண்டறிந்து, மன அழுத்தத்தை நீக்க முயற்சியுங்கள்.
தலையின் மொத்த எடையை கழுத்து தாங்கி நிற்கிறது. இப்போது செல்போன் பயன்படுத்த குனியும் போது, அது கிட்டத்தட்ட 12 முதல் 18 கிலோ எடையை தாங்குகின்றது. தினசரி நாம் பல மணி நேரம் குனிந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தால், கழுத்தின் நிலை என்னவாகும்? கழுத்தின் தசைகள் வலிக்க தொடங்குவது மட்டுமல்ல, நரம்புகளும் அழுத்தப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
கழுத்து வலி நீக்கும் யோகாசனம்
![]() |