தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்


UPDATED : நவ 15, 2026 12:21 PM

ADDED : நவ 14, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:21 PM ADDED : நவ 14, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது வரை அடுத்தடுத்து போடப்படும் தடுப்பூசிகள் குறித்துப் பெற்றோர் மத்தியில் பல சந்தேகங்களும் அச்சங்களும் எழுவது இயல்புதான். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் இந்தக்குழப்பங்களை மேலும் அதிகரிக்கின்றன.

நவீன மருத்துவத்தின் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாகத் தடுப்பூசிகள் கருதப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சியடைந்து வரும் காலகட்டத்தில், சில தொற்று நோய்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் தடுப்பூசிகள் உதவுகின்றன.

தடுப்பூசிகள் குறித்துப் பெற்றோர்களிடையே காணப்படும் பொதுவான தவறான நம்பிக்கைகளில் ஒன்று, தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என்பதாகும். தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பு இருப்பதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

எனவே, இதுபோன்ற தவறான தகவல்களைக் கேட்டு குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கக் கூடாது. பெற்றோர்கள் மருத்துவ அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து பல தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுவதால், அவற்றை ஒரே காலகட்டத்தில் செலுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்குமா என்ற சந்தேகம் சில பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், மருத்துவர் கூற்றுப்படி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரே நேரத்தில் பல தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக எதிர்கொள்ளும் திறன் கொண்டது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தின்படி அவற்றைச் செலுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

ஆனால், தடுப்பூசிகள் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைத்து, பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. நோய் வந்து குணமடைவதற்காக காத்திருப்பதைவிட, முன்கூட்டியே தடுப்பூசி மூலம் பாதுகாப்பை ஏற்படுத்துவது சிறந்த அணுகுமுறை ஆகும்.

தற்போது சில தொற்று நோய்கள் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதால், அவற்றுக்கான தடுப்பூசிகள் இனி தேவையில்லை என்று சில பெற்றோர்கள் நினைக்கலாம். ஆனால், அந்த நோய்கள் குறைந்திருப்பதற்கு முறையான தடுப்பூசித் திட்டங்களே முக்கியக் காரணம் என்று மருத்துவர் அருள்ராஜ் கூறுகிறார்.

ஒருவேளை தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தினால், எதிர்காலத்தில் அந்த நோய்கள் மீண்டும் பரவுவதற்கான அபாயம் ஏற்படலாம். எனவே, நோய்கள் குறைந்துவிட்டன என்பதற்காக அவற்றுக்கான தடுப்பூசிகளைப் புறக்கணிக்கக் கூடாது.குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை முறையாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us