தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/உள் உறுப்புகளை பலமாக்கும் தூயமல்லி அரிசி...!

உள் உறுப்புகளை பலமாக்கும் தூயமல்லி அரிசி...!

உள் உறுப்புகளை பலமாக்கும் தூயமல்லி அரிசி...!


UPDATED : பிப் 27, 2023 10:30 AM

ADDED : பிப் 27, 2023 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2023 10:30 AM ADDED : பிப் 27, 2023 08:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் சாப்பிடும் உணவில் அரிசியைத் தவிர்த்தால் அது முழுமை பெறாது. அப்படிப்பட்ட அரிசியானது சத்தானதாகவும்,எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இல்லதரிசிகள் அரிசியை வாங்கும் போது, பளபளப்பாகவும், எளிதில் வேகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படி வெண்மையும், சத்தும் நிறைந்த அரிசி ரகம் தான் இந்த தூயமல்லி அரிசியாகும்.

பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான இதில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, புரதச் சத்து, மாவுச் சத்து ஆகிய சத்துக்கள் உள்ளது.

நரம்பு மண்டலம்

Image 1074760
தூய மல்லி அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, நரம்பு மண்டலம் பலம் பெறும். வயதான காலத்தில் வெளித்தோற்றம் மட்டுமல்லாமல், உள் உறுப்புகளும் முதிர்ச்சியடையும்.இவற்றைத் தடுக்க தூயமல்லி அரிசியில் ஆன உணவுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

உடல் உறுப்புகள்

Image 1074757
உடலின் வெளித்தோற்றம் போல, உள் உறுப்புகளின் ஆரோக்கியமும் அவசியமாகும். அவை ஆரோக்கியமாக இருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சாத்தியப்படும். ஆகையால் உள் உறுப்புகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும், தூயமல்லி அரிசி வழங்குகிறது.

பித்தம்

Image 1074756
சிலருக்கு உடம்பில் அதிகளவு பித்தம் இருப்பதால், அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால் அவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இதைத் தடுக்க தூயமல்லி அரிசியில் உணவு செய்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னைகள் கட்டுக்குள் வரலாம். இதோடு, வாதம், கபம் ஆகியவையும் சரியாகும்.

சரும சுருக்கம்

Image 1074759
சருமத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் சில உணவுப் பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இதைத் தடுக்க தூய மல்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வந்தால் சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது.

நீரிழிவு

Image 1074758
தூய மல்லி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக இது உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். தூய மல்லி அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவாகச் சாப்பிடலாம்.

கால்நடை

தூய மல்லி அரிசி மட்டுமல்லாமல், தவிட்டிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வந்தால் ஆரோக்கியமாக வளரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us