தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான வழிமுறைகள்!

விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான வழிமுறைகள்!

விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான வழிமுறைகள்!


UPDATED : பிப் 05, 2023 08:57 PM

ADDED : பிப் 05, 2023 12:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2023 08:57 PM ADDED : பிப் 05, 2023 12:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த கருத்தரித்தல் மையங்களுக்கும் செல்லாமல் நமது பாட்டிமார்கள் அரை டஜன், ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்ற காலம், கண் முன்னே மலையேறி விட்டது. இன்று திருமணமாகும் தம்பதிகளில் சுமார் 15% பேர் குழந்தைப் பேறு அடைவதில் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். 30% ஆண்களின் விந்தணுக்கள் தரமற்று இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அமெரிக்கன் பிரக்னன்சி அசோசியேஷன் விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது அவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.

கர்ப்பம் தரிக்க கருமுட்டை வெளிப்பட வேண்டும். சினைப்பையிலிருந்து முதிர்ந்த முட்டை வெளியாகி பெலோபியன் குழாய் வழியாகத் தள்ளப்பட்டு, விந்தணுக்களுக்காக காத்திருக்கும். கருமுட்டைக்காக கருப்பையின் லைனிங் தடிமனாகும். விந்தணுக்கள் சேரவில்லை எனில், அந்த தடிமனமாகிய பகுதி உதிரப்போக்குடன் வெளியேறும். இதனை மாதவிடாய் என்கிறோம்.

கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?

Image 1063530
அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெரும்பாலான ஆரோக்கியமான தம்பதிகள் ஒரு ஆண்டுக்குள் கருத்தரிக்கிறார்கள். இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் 20 வயதில் அதிகம் இருக்கும். வயதாக வயதாக கருவுறுதல் வாய்ப்பு குறையத் தொடங்குகிறது. ஒரு ஆரோக்கியமான 30 வயதுடைய பெண் ஒவ்வொரு மாதமும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு 20% உண்டு. 40 வயதாகும்போது இந்த வாய்ப்பு 5% ஆக குறைகிறது. 45 வயதிற்குள் இருப்பவர்களில் இயற்கையாக கர்ப்பம் தரிப்பவர்கள் எண்ணிக்கை மிகச்சொற்பம்.

கருத்தரிக்க முயற்சியும் புதிய ஜோடிகளில்

30 சதவீதம் பேர் கருமுட்டையின் முதல் சுழற்சியில் (ஒரு மாதத்தில்) கர்ப்பமாகிறார்கள்.

60 சதவீதம் பேர் மூன்று சுழற்சிகளுக்குள் (3 மாதத்திற்குள்) கர்ப்பமாகிறார்கள்.

80 சதவீதம் பேர் ஆறு சுழற்சிகளுக்குள் (சுமார் ஆறு மாதங்களில்) கர்ப்பமாகிறார்கள்.

85 சதவீதம் பேர் 12 சுழற்சிகளுக்குள் (சுமார் ஒரு வருடம்) கர்ப்பமாகிறார்கள்.

92 சதவீதம் பேர் 48 சுழற்சிகளுக்குள் (சுமார் நான்கு ஆண்டுகள்) கர்ப்பமாகிறார்கள்.

அதன்படி திருமணமாகி ஓராண்டுக்குள் தான் ஆகிறது எனில் நீங்கள் பதற்றமடையத் தேவையில்லை. கருமுட்டை வெளிப்படும் நாட்களில் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்தால் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பு கூடும். ஓராண்டுக்கு மேல் ஆனது எனில் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளைப் பெறலாம்.

கருமுட்டை வெளிப்பாடு


ஒவ்வொரு பெண்ணும் லட்சக்கணக்கான முதிர்ச்சியடையாத கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். சினைப்பையிலிருந்து வெளியாகும் கருமுட்டையானது 12 - 24 மணிநேரம் வரை செயல்திறனுடன் இருக்கும். பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெளியாகும். மன அழுத்தம், உடல்நலக் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, பயணம், எடையில் குறிப்பிட்ட மாறுபாடுகள், உடற்பயிற்சி அல்லது தூங்கும் முறைகள் போன்றவை இந்த முட்டை வெளிப்படுதலை பாதிக்கும்.

ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளியேறாமலும் மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் ஏற்படாவிட்டாலும் கருமுட்டை வெளிப்படும். அதனால் தான் மருத்துவர்கள், குழந்தை பெற விரும்புபவர்கள் குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட வலியுறுத்துகின்றனர். ஒரு முட்டை கருவுறவில்லை என்றால், அது சிதைந்து, கருப்பையின் லைனிங்கால் உறிஞ்சபட்டு, மாதவிடாயின் போது வெளியேறும்.

ஒரு பெண் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை

Image 1063531
கர்ப்பம் தரிப்பது மற்றும் கர்ப்பத்தைத் தடுப்பது ஆகிய இரண்டையும் தீர்மானிக்கும் காரணியாக இந்த கருமுட்டை வெளிப்பாடு உள்ளது. ஒரு பெண் தன் உடலைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயல்முறைகளில் இதுவும் ஒன்று.சராசரியாக, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 - 32 நாட்களுக்குள் இருக்கும். அதில் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட 12ம் நாள் முதல் 21 நாளுக்குள் கருமுட்டை வெளியேறும். இந்த நாட்களில் தொடர்ந்து உடலுறவு கொள்வது கர்ப்பத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

தற்போது ஓவுலேஷனை டிராக் செய்ய ஆப்கள் வந்துவிட்டன. அதில் மாதவிடாய் தொடங்கிய தேதி, பொதுவாக ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிறைவடைய எடுத்துக்கொள்ளும் நாட்களை குறிப்பிட்டால், கருமுட்டை வெளிப்படும் நாட்களை அது கணித்து காட்டிவிடும்.

கருமுட்டை வெளிப்படும் சமயத்தில் பிறப்புறுப்பு சுரப்புகளில் மாற்றம் நடக்கும். கருமுட்டை வெளிப்படுவதற்கு முன் தெளிவான, ஈரமான சுரப்புகள் தோன்றும். கருமுட்டை வெளிப்பட்ட பின் அது குறைந்து, திக்கானதாக மாறும். கருமுட்டை வெளிப்படும் போது உடல் வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்.

குழந்தைப் பேறு வாய்ப்பை அதிகரிக்க...


மாதவிடாய் முடிந்தவுடன் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை மற்றும் குறைந்த எடை கொண்ட பெண்களுக்கு கருமுட்டை வெளிப்படுதலில் கோளாறுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

விந்தணு மற்றும் கருமுட்டைக்கு ஏற்ற வழவழப்பு திரவங்களை பயன்படுத்தலாம்.

சத்து மாத்திரை, மருந்துகளை மருத்துவரை ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம்.

புகைப்பிடிக்காதீர்கள். புகையிலை கருவுறுதலுக்கு எதிரி. எனவே புகைப்பிடிப்பர் எனில் அதனை விடுவதற்கான ஆலோசனைகளைப் பெறுங்கள்.

மது அருந்த வேண்டாம். அதிக ஆல்கஹால் பயன்பாடு கருவுறுதலைக் குறைக்கும். நீங்கள் கருத்தரிக்க விரும்பினால் மதுவைத் தவிர்க்கவும்.

பெண்கள் கேபைனை குறைக்க வேண்டும். காபி, எனர்ஜி டிரிங் போன்றவற்றை அருந்தக் கூடாது. ஒரு நாளை 2 கப் காபி அருந்தலாம். அதற்கு மேல் சென்றால், அதுவும் கருவுறுதலை பாதிக்கும்.

அதிக உடற்பயிற்சியும் கருமுட்டை வெளிப்பாட்டை பாதிக்கும். வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கு மேல் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கருமுட்டை வெளிப்படும் வாய்ப்பு குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us