sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

பாரம்பரியமும்... அரிசியும் - ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா..!

/

பாரம்பரியமும்... அரிசியும் - ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா..!

பாரம்பரியமும்... அரிசியும் - ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா..!

பாரம்பரியமும்... அரிசியும் - ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா..!


UPDATED : மார் 10, 2023 08:20 AM

ADDED : மார் 10, 2023 08:10 AM

Google News

UPDATED : மார் 10, 2023 08:20 AM ADDED : மார் 10, 2023 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தேடிப் பிடித்துச் சாப்பிடுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறோம். குறிப்பாக, இயற்கை முறையில் விளைந்த பொருட்களுக்கு தற்போது தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. அப்படித் தேடி,தேடி பார்த்து உண்ணும் பட்டியலில் இந்த அரிசி ரகத்திற்கு எப்போதுமே தனி இடம் உள்ளது. பலரும் விரும்பி சாப்பிடும் பாரம்பரிய அரிசி ரகங்களில், கருடன் சம்பாவும் ஒன்றாகும்.

இந்த கருடன் சம்பா அரிசி ரகமானது நெல் மணிகள் சிவப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். விரைவில் வேகும் தன்மையும், ஊட்டச்சத்தும் நிறைந்தது இதன் பண்பாகும்.

பெயர் காரணம்

Image 1080538
கருடன் கழுகுக்கு கழுத்தில் வெள்ளை நிறம் இருப்பது போல, இந்த நெல்லின் நுனிப்பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் என அனைத்தையும் தாங்கி வளரும் தன்மை கொண்டதால், இதற்குக் கருடன் சம்பா அரிசி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அறுவடை காலம் 140 நாட்கள் ஆகும்.

பயன்கள்


கருடன் சம்பா அரிசியைத் தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உடம்பில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது.

சிறுநீரக பிரச்னைகள், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருடன் சம்பா அரிசிக்கு உள்ளது.

ரத்த சோகை, சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலனை அளிக்கும்.

எலும்புகளை வலுப்படுத்தும் சிறந்த அரிசி ரகம் இந்த கருடன் சம்பாவாகும். இந்த அரிசியில், எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

நாம் சாப்பிடும் துரித உணவுகள் மற்றும் ரசாயனம் கலந்த உணவுகளால் தேவையற்ற கொழுப்புக் கட்டிகள் உருவாகும். இதை முற்றிலும் தடுக்கும் குணம் இந்த அரிசி ரகத்திற்கு உள்ளது.

உடல் எடை அதிகரித்துக் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடை எடையைக் குறைக்கலாம்.

இந்த அரிசியில் அனைத்து விதமான பலகாரங்கள் மற்றும் சிற்றுண்டிகள் செய்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us