தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/பாரம்பரியமும்....அரிசியும் - வயது முதிர்வை தடுக்கும் கருங்குறுவை...!

பாரம்பரியமும்....அரிசியும் - வயது முதிர்வை தடுக்கும் கருங்குறுவை...!

பாரம்பரியமும்....அரிசியும் - வயது முதிர்வை தடுக்கும் கருங்குறுவை...!


UPDATED : ஏப் 05, 2023 01:19 PM

ADDED : ஏப் 05, 2023 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2023 01:19 PM ADDED : ஏப் 05, 2023 08:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரம்பரிய உணவு வகைகளின் அவசியத்தையும், தேவையையும் உணர்ந்து இயற்கை முறையில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் என அனைத்தையும் தேடி சாப்பிட பழகி வருகின்றனர். இதற்கு காரணம் பெருகி வரும் நோய்களின் தாக்கமும், மாறி வரும் சுற்றுச்சூழல் மாறுபாடும் தான் காரணம்.

இந்த வகையில், அனைவரின் முதல் தேடலாக உள்ளது பாரம்பரிய அரிசி வகைகள் தான். அதில் ஒன்று தான் கருங்குறுவை அரிசி. பழங்கால அரிசி வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அறுவடைக் காலம்


சாகுபடி செய்த நாட்களிலிருந்து 120-125 நாட்களில் அறுவடைக்கு வரும், இந்த கருங்குறுவை அரிசி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. டிசம்பர்- ஜனவரி மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் பயிரிடப்படும். இந்த அரிசி ரகம் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த நிறத்தில் இருக்கும்.

சத்துக்கள்


கருங்குறுவை அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ,பி,பி12,கே, புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளது. இந்த அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.

பயன்கள்

கருங்குறுவை அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும்.

பெண்கள் மகப்பேறு அடைய இந்த அரிசி பெரிதும் உதவுகிறது.

உடலில் தேங்கும் கொழுப்புகளைக் கரைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும்.

வயது முதிர்வைத் தடுத்து சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.

இந்த அரிசியில் தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்ளும் போது, யானைக்கால், காலரா நோய் வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us