தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/துாக்கமும் கண்களை தழுவட்டுமே

துாக்கமும் கண்களை தழுவட்டுமே

துாக்கமும் கண்களை தழுவட்டுமே


UPDATED : ஆக 21, 2026 07:47 AM

ADDED : ஆக 15, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2026 07:47 AM ADDED : ஆக 15, 2026 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிருபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.

மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் தினமும் எட்டு மணி நேரமாவது நன்றாகத் தூங்கவேண்டும் என, கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.துாங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் துாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, செரியாமை, மலச்சிக்கல், உள்ளிட்ட நோய்கள் எளிதில் உண்டாகும். துாங்குவதற்கான திசைகளையும் சித்தர்கள் அன்றே வகுத்துள்ளனர். கிழக்கு திசை நோக்கி தலை வைத்து படுப்பது சிறந்தது. மேற்கு திசையில் தலை வைத்துப்படுப்பதால், கனவு, அதிர்ச்சியும், தெற்கு திசையில் வைத்துப்படுத்தால் ஆயுள் கூடும், வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது எனவும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசயங்கள் அனைத்தும் அறியவியல் ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us