தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/எண்ணிலடங்காத நன்மைகள் கொண்ட வாட்டர் ஆப்பிள்!

எண்ணிலடங்காத நன்மைகள் கொண்ட வாட்டர் ஆப்பிள்!

எண்ணிலடங்காத நன்மைகள் கொண்ட வாட்டர் ஆப்பிள்!


UPDATED : பிப் 09, 2023 05:34 PM

ADDED : பிப் 09, 2023 02:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2023 05:34 PM ADDED : பிப் 09, 2023 02:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டதுதான் இந்த 'வாட்டர் ஆப்பிள்' பழம். இதில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய தண்ணீர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியா. இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் சில இங்கே...

செல்கள் சேதத்தைத் தடுக்கும்:


Image 1065808
தண்ணீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது. மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. தண்ணீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி:


தண்ணீர் ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இவை உடலை நோய் தொற்றுகளிலிருந்து காத்திடும். அதுமட்டுமின்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கிடும்.

தசைப்பிடிப்பு வலி போக்கும்:


இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து தசைகளுக்கு வலிமை தரும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியைப் போக்க உதவுகிறது. மது மற்றும் புகைப் பழக்கம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும்.

மலச்சிக்கலைப் போக்கும்:


Image 1065807
இப்பழம், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கிறது.நார்ச்சத்து நிறைந்த இப்பழம் மலச்சிக்கலை நீக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:


தண்ணீர் ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவுகிறது. இதன்மூலம், இதயம் சம்பந்தப்பட்ட மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளைக் குறைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us