தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எவ்வாறு நிறுத்த வேண்டும்? - மருத்துவர் விளக்கம்

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எவ்வாறு நிறுத்த வேண்டும்? - மருத்துவர் விளக்கம்

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எவ்வாறு நிறுத்த வேண்டும்? - மருத்துவர் விளக்கம்


UPDATED : ஜூன் 25, 2023 11:49 AM

ADDED : ஜூன் 25, 2023 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 11:49 AM ADDED : ஜூன் 25, 2023 11:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கம் மற்றும் உலக சுகாதார நிறுவனம், பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும், அதன் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது வரை அல்லது தாய்ப்பால் சுரக்கும் வரை வழங்கலாம் என்கிறது.

தாய்ப்பால் புகட்டும் பெண்கள் பலரும் குழந்தைக்கு 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை நிறுத்த முயற்சிக்கின்றனர். இது குறித்து புதுவை லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவர் மு.ஜெயராஜிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:

Image 1131470


2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. தாய்ப்பால் சுரக்கின்ற வரை வழங்கலாம். ஆரம்ப 6 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அந்தக் காலக்கட்டத்தில் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை அழுதவுடன் புகட்டலாம் என விடக் கூடாது. குழந்தை தனக்கு தாய்ப்பால் தேவை என்பதை அறிகுறி மூலமே காட்டும். விரலை சப்பும், பால் குடிப்பது போல் உதட்டைக் குவிக்கும். அப்போது தாய்ப்பால் எதிர்பார்க்கிறது என அர்த்தம்.

தாய்ப்பால் புகட்டும் போது சில குழந்தைகள் 5 நிமிடங்களிலேயே தூங்கிவிடும். அப்படி தூங்கினாலும் எழுப்பி குடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் அரைமணி நேரத்தில் மீண்டும் விழிப்பு வந்து அழும். தாய்ப்பாலை பொறுத்த வரை முன் பால், பின் பால் என வகை உண்டு. குழந்தை குடிக்க ஆரம்பிக்கும் போது முன் பால் தான் வரும். அதில் நீர்ச்சத்துக்கள் இருக்கும். பின் பாலில் தான் லிப்பிடுகள், ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இவையே பசியை ஆற்றி தேவையான போஷாக்கைத் தரும். குழந்தை முழுதாக பசி ஆற 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.

Image 1131468


ஒரு மார்பில் முழுதாக குடித்தப் பின்னர் மறு மார்பில் பால் கொடுக்க வேண்டும். அப்போது வயிறு நிரம்பி தூங்கிவிட்டது என்றால், அடுத்த முறை அதே மார்பில் இருந்து பால் தர ஆரம்பிக்க வேண்டும். அதே போல் இரவிலும் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்டுங்கள்.

2 வயதுக்கு மேலும் தாராளமாக தாய்ப்பால் வழங்கலாம். இரவில் மட்டுமாவது கொடுக்கலாம். அப்படி 2 வயதுக்கு மேல் வேறு சில காரணங்களுக்காக நிறுத்த நினைத்தால் காம்பில் விளக்கெண்ணெய் தடவலாம். அச்சுவை பிடிக்காமல் பால் குடியை குழந்தை மறக்கும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us