UPDATED : செப் 07, 2023 04:18 PM
ADDED : செப் 07, 2023 04:16 PM

வாய் துர்நாற்றம், வாய்க்கசப்பு, நாக்கு வறண்டு போகும் உணர்வு நடுத்தர வயதினர், முதியோருக்கு அதிகம் ஏற்படும் பிரச்னைகளுள் ஒன்று. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடிக்கடி வாய்க்கசப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதற்குண்டான தீர்வையும் பார்ப்போம்.
சிலர் காலை அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் சரியாகப் பல் துலக்க மாட்டர். இதனால் வாய் துற்நாற்றம் ஏற்படலாம். குறைந்தது ஒரு நிமிடம்வரை பல் துலக்குவது வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.
நாள்பட்ட நீரிழிவு பாதிப்பு, கேஸ்ட்ரைட்டிஸ், அல்சர் கொண்டவர்களுக்கு வாய் துர்நாற்றாம் உண்டாகலாம். மேலும், அடிக்கடி வாய்க்கசப்பு ஏற்படலாம்.
புகை, மதுப் பழக்கம் கொண்டவர்களுக்கு வாய்க்கசப்பு மற்றும் உடல் நீர் அளவு குறைபாடு உண்டாகும். உடலில் உள்ள நீர்ச்சத்தை மதுவில் உள்ள ஆல்கஹால் ஸ்பிரிட் விரைவில் உறிந்துவிடும். எனவே இந்த பழக்கங்களைக் கைவிடுவது நல்லது.
தினசரி மருந்து மாத்திரை சாப்பிடும் முதியோருக்கு நாவில் உள்ள சுவை அரும்புகள் மாத்திரை ரசாயனங்களால் பாதிக்கப்படலாம். இதனால் நாக்கு சுவை அறிய சிரமப்படும். மேலும் அடிக்கடி வாய்க்கசப்பும் உண்டாகும்.
![]() |
புற்றுநோய்க்கு கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை பெறுபவர்களுக்கு வாய்க்கசப்பு ஏற்படலாம்.
சாப்பிட்டு முடித்த பின்னர் சரியாக வாய் கொப்பளிக்காமல் உள்ள பலருக்கு உணவுத் துணுக்குகளால் பல் இடுக்குகளில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. இது வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும். இதனால் வாய் துர்நாற்றம், கசப்பு ஏற்படலாம்.
அடிக்கடி தேநீர், காபி உள்ளிட்ட கஃபைன் பானங்கள் அருந்துவோருக்கு வாய்க்கசப்பு ஏற்படலாம்.
வெற்றிலை, புகையிலை போடும் பழக்கம் கொண்டவர்களுக்கு வாயில் பலவித பிரச்னைகள் ஏற்படும். இவர்களுக்கு வாய்க்கசப்பு, அதீத தண்ணீர் தாகம், வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்பழக்கங்களைத் தவிர்த்தல் வாய் சுகாதாரத்துக்கு நல்லது.

