தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சுற்றுலா பயணியரை கவரும் மிர்ஜன் கோட்டை

சுற்றுலா பயணியரை கவரும் மிர்ஜன் கோட்டை

சுற்றுலா பயணியரை கவரும் மிர்ஜன் கோட்டை


ADDED : மார் 06, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோர மாவட்டமான உத்தர கன்னடா என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அழகான கடற்கரைகள், பிரமாண்ட சிவன் சிலை கோவில் தான். ஆனால் அங்கு ஒரு அழகான கோட்டையும் உள்ளது. அந்த கோட்டை எங்கு உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

உத்தர கன்னடாவின் கோகர்ணாவில் இருந்து, குமட்டா செல்லும் வழியில் அமைந்துள்ளது மிர்ஜன் கோட்டை. விஜயநகர மன்னர்கள் வழிவந்த ராணி சென்னபைரவ் தேவியால் 16ம் நுாற்றாண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

லேட்டரைட் கற்களை பயன்படுத்தி நேர்த்தியாக கட்டப்பட்டு இருக்கிறது. நான்கு நுழைவுவாயில்களை கொண்டது.

கோட்டைக்குள் இருக்கும் சுரங்கப்பாதை, தெற்கு கோவா பகுதிகளை இணைக்கும் வகையில் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வழி மூடப்பட்டுவிட்டது.

இந்த கோட்டையை 1784ல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தற்போது இந்த கோட்டையை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. கோட்டைக்குள் இருந்து 2001ம் ஆண்டு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது சுற்றுலா தலமாக உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கோட்டையை சுற்றிப் பார்க்கலாம். அனுமதி இலவசம்.

கோட்டைக்கு அருகில் ஷராவதி நதியின் துணை நதியான அகநாசினி உள்ளது. கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து 11 கி.மீ., துாரத்தில் கும்டா, 22 கி.மீ., துாரத்தில் ஹொன்னாவர், 59 கி.மீ., துாரத்தில் கார்வார், 56 கி.மீ., துாரத்தில் முருடேஸ்வரா ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க திட்டமிடலாம்.

பெங்களூரில் இருந்து 460 கி.மீ., துாரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து கோகர்ணா, குமட்டாவுக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. ரயில் வசதியும் உள்ளது. விமானத்தில் சென்றால், மங்களூரு சென்று அங்கிருந்து வாடகை காரில் செல்லலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us