sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 அடர்ந்த வனத்தின் நடுவே ரகசிய அரண்மனை

/

 அடர்ந்த வனத்தின் நடுவே ரகசிய அரண்மனை

 அடர்ந்த வனத்தின் நடுவே ரகசிய அரண்மனை

 அடர்ந்த வனத்தின் நடுவே ரகசிய அரண்மனை


ADDED : ஜன 29, 2026 06:40 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக அரண்மனைகள், நகரின் அருகில் இருக்கும். இங்கு எப்போதும் சுற்றுலா பயணியர் கூட்டம் குவிந்திருக்கும். ஆனால் குடகில் உள்ள ஒரு அரண்மனை வனத்துக்கு நடுவே, ரகசியமாக ஒளிந்துள்ளது. இந்த அரண்மனைக்கு செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது சாகச விரும்பிகளுக்கு தீனி போடும் இடம்.

குடகு மாவட்டத்தின், மிகவும் உயரமான மலையான தடியண்டமோள் மலைகளுக்கு நடுவே, யுவகவாடி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதி மத்தியில் இந்த அரண்மனை உள்ளது. யாருடைய கண்களுக்கும் புலப்படாத, இத்தகைய இடத்தில் அரண்மனையை கட்டியது ஏன் என்ற கேள்வி எழும். அரண்மனை பின்னணியில், ஒரு வரலாறு உள்ளது.

சிறையில் அடைப்பு அனைத்து வளங்களும் நிறைந்த நாடாக இருந்த குடகை, கைப்பற்ற வேண்டும் என்பது, திப்பு சுல்தானின் எண்ணமாக இருந்தது. எனவே, குடகை ஆட்சி செய்த மன்னர் தொட்ட வீர ராஜேந்திராவை கைது செய்த திப்புசுல்தான், பிரியாபட்டணாவின் கோட்டையில் அடைத்திருந்தார்.

கடந்த 1791 - 1792ல், ஆங்கிலேயர்கள் மற்றும் திப்பு சுல்தான் இடையே யுத்தம் நடந்த போது, தொட்டவீர ராஜேந்திரா சிறையில் இருந்து தப்பினார்.

தன் குடும்பத்துடன், குடகின் குர்ச்சி கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த அவரது அரண்மனை எதிரிகளால் நாசமாக்கப்பட்டிருந்தது.

எதிரிகளிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற, படையுடன் பாதுகாப்பான இடத்தை தேடினார். அப்போது அவரது கண்ணில் யுவகவாடி தென்பட்டது.

மலைகளுக்கு இடையே, அடர்த்தியான வனம் சூழ்ந்திருந்தது. அது பாதுகாப்பான இடமாக தோன்றியதால், அங்கு அரண்மனை கட்டும்படி, சேனைக்கு கட்டளையிட்டார்.

அதன்படி அரண்மனை கட்டப்பட்டது. அரண்மனையின் மேற்கூரைக்கு, வைக்கோல் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் பிரிட்டிஷார் காலத்தில், ஓடுகள் பொருத்தப்பட்டன.

இரண்டு நுழை வாயில்கள் உள்ள இந்த அரண்மனை, இரண்டு மாடிகள் கொண்டது. மேல் மாடியில் அழகான கலை சிற்பங்களை காணலாம். அரண்மனையில் 14 சிறிய அறைகள், நான்கு இருட்டறைகள் உள்ளன.

அரசர் காலத்தில் குற்றம் செய்தவர்களை, இங்கு அடைத்து வைப்பார்களாம்.

ஜன்னல்கள், கதவுகளும் கூட கலை நயத்துடன் தென்படுகின்றன. அரண்மனை உட்புறம் அம்பாரியில் அமர்ந்த மன்னர், அவருக்கு முன்னேயும், பின்னேயும் செல்லும் சேனைகளின் ஓவியத்தை காணலாம். இந்த அரண்மனை முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டிருப்பது, மற்றொரு சிறப்பாகும்.

சிறிய மண்டபம் அரண்மனை முன் பகுதியில், சதுர வடிவில் சிறிய மண்டபம் உள்ளது. இதற்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன. மண்டபத்தின் மேற்புறம் நான்கு திசைகளிலும், படுத்த நிலையில் உள்ள நந்தி சிலைகள் உள்ளன.

இது திருமண மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இதே மண்டபத்தில், 1796ல் தொட்ட வீர ராஜேந்திராவுக்கும், மஹாதேவம்மாவுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை, 'நால்குநாடு' அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

புராதன துறை கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனை, சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. இதற்கு முன் சரியான பாதைகள், குடியிருப்பு வசதிகள் இருக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணியர் வரவில்லை. தடியண்டமோள் மலைக்கு செல்வோர், இந்த அரண்மனைக்கு வந்து தங்குவர். ஆனால் இப்போது அப்படி அல்ல.

தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்காகவே, ஏராளமான ஹோம் ஸ்டேக்கள் கட்டப்பட்டுள்ளன.

பசுமையான இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்பகுதி நடுவில், அரண்மனை உள்ளது. மனதுக்கு இதமளிக்கும் அமைதியான சூழ்நிலையில் உள்ளதால், அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

அரண்மனை அருகில் மலையில் இருந்து, நீர்வீழ்ச்சி பாய்கிறது. மற்றொரு அழகான நீர்வீழ்ச்சி, அரண்மனை எதிரே உள்ள பாதையில், 3 கி.மீ., தொலைவில் உள்ளது. உள்ளூர் மக்கள் வார இறுதி நாட்களில் இங்கு வருகின்றனர்.

எப்படி செல்வது? l பெங்களூரில் இருந்து, 249 கி.மீ., மைசூரில் இருந்து 46 கி.மீ., மாண்டியாவில் இருந்து 155 கி.மீ., குடகில் இருந்து 17 கி.மீ., தொலைவில், மடிகேரி உள்ளது. மடிகேரியில் இருந்து 40 கி.மீ.,யில், நால்குநாடு அரண்மனை உள்ளது. l அனைத்து நகரங்களில் இருந்தும், மடிகேரிக்கு தேவையான அளவில் அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வர விரும்பினால், மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனங்களில் அரண்மனைக்கு செல்லலாம். l பார்வை நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தொடர்பு எண்: 077602 20064 l அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: செலவாரா நீர் வீழ்ச்சி, கப்பே மலை, தடியண்டமோள் மலை, பாக மண்டலா, சிங்காரா நீர் வீழ்ச்சி.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us