/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குழந்தைகளுக்கு பிடித்த அலமாட்டி லவ - குசா பூங்கா
/
குழந்தைகளுக்கு பிடித்த அலமாட்டி லவ - குசா பூங்கா
குழந்தைகளுக்கு பிடித்த அலமாட்டி லவ - குசா பூங்கா
குழந்தைகளுக்கு பிடித்த அலமாட்டி லவ - குசா பூங்கா
ADDED : நவ 12, 2025 10:01 PM

குழந்தைகளுக்கு ராமன் - சீதை தம்பதியின் புதல்வர்களான லவ - குசா ஆகியோரின் வரலாற்றை, குழந்தைகள் தெரிந்து கொள்ள 'அலமாட்டி லவ - குசா பூங்கா' சிறந்த இடமாகும்.
இலங்கையில் இருந்து ராமன் - சீதை நாடு திரும்பினார். பின், கருவுற்றிருந்த நிலையில், வீட்டில் இருந்து சீதை விரட்டப்பட்டார். அவருக்கு, வால்மீகி முனிவர் அடைக்கலம் கொடுத்தார். அங்கு சீதைக்கு லவ - குசா பிறந்தனர்.
லவ - குசா வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு, விஜயபுரா மாவட்டம் அலமாட்டி அணை அருகில் 'லவ - குசா பூங்கா' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் சீதைக்கு மகன்களாக பிறந்து, அவர்களுக்கு வால்மீகி முனிவர், பல வித்தைகளை பயிற்றுவிக்கிறார்.
அஸ்வமேத யாகம் நடத்த, ராமன், தன் குதிரையை அனுப்புவார். இந்த குதிரையை லவ - குசா பிடித்து வைத்துக் கொள்வர். இதை மீட்க வரும் வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் சென்றுவிடுவர். இதையறிந்த ராமன், நேரடியாக அங்கு வருவார். மகன்கள் என்றும், தந்தை என்றும் தெரியாமல், ராமன் தேரில் இருந்தபடி அம்பு மூலம் குறிவைப்பதும், லவ - குசாவும் அம்பு மூலம் குறிவைக்கும் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று ராமனின் வானர சேனைக்கு எதிராக போரிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
வனப்பகுதியில் முனிவர்கள் வசித்து வந்த குடில்கள் போன்று கட்டப்பட்டுள்ளன. இதுபோன்று லவ -- குசா வாழ்க்கை வரலாறு, சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் தங்கள் குழந்தைகளுக்கு, இந்த சிற்பங்களை காண்பித்தே வரலாற்றை விளக்கலாம்.
பூங்காவுக்குள் சீதை கோவில் உள்ளது. இதன் முன்னாள், இரு குளங்கள் உள்ளன. இந்த குளங்கள், எத்தகைய கோடைகால வெப்பமாக இருந்தாலும் வறண்டதில்லையாம். அதுமட்டுமின்றி, அணையின் கரையில் பூங்கா அமைந்துள்ளது. பூங்காவுக்குள் சிறிது துாரம் நடந்து சென்றால், பரந்து விரிந்து காணப்படும் அலமாட்டி அணை நீர்த்தேக்கத்தை கண்டு ரசிக்கலாம்.
தினமும் காலை 6:00 முதல் 9:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் இப்பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுபோன்று, இசை நீரூற்றுக்கு அனைத்து வயதினருக்கும் 20 ரூபாய் கட்டணமும், படகு சவாரிக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
13_Article_0001, 13_Article_0002, 13_Article_0003
லவ - குசாவுக்கு வால்மீகி முனிவர் வில் பயிற்சி அளிப்பதை சீதா தேவி பார்க்கிறார். (அடுத்த படம்) அஸ்வமேத யாக குதிரையை மீட்க வந்த வானரர்களுடன் போர். (கடைசி படம்) மகன்களுக்கு எதிராக வில் அம்புடன் ராமன்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், கலபுரகி விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 208 கி.மீ., தொலைவில் உள்ள அலமாட்டிக்கு செல்லலாம்.
ரயிலில் செல்வோர், விஜயபுரா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள பூங்காவுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், அலமாட்டி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள பூங்காவுக்கு, பஸ், டாக்சியில் செல்லலாம்.
- நமது நிருபர் -:

