/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மக்களை ஈர்க்கும் பனசங்கரி சிற்ப பூங்கா
/
மக்களை ஈர்க்கும் பனசங்கரி சிற்ப பூங்கா
ADDED : நவ 27, 2025 07:29 AM

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு பூங்கா நகரம் என்ற புனைப்பெயரும் உள்ளது. அதிலும் லால்பாக், கப்பன் பார்க் ஆகிய பூங்காக்கள் இந்த மாநிலத்தினரை மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரையும் வெகுவாக கவருகின்றன.
லால்பாக், கப்பன் பார்க்கை தவிர, நகரில் வேறு சில பூங்காக்களும் உள்ளன. இவற்றில் சிற்ப பூங்காவும் ஒன்று. பனசங்கரி 6வது ஸ்டேஜ் முதல் பிளாக் சுப்பிரமணியபுராவில், பாரத் ஹவுசிங் சொசைட்டி லே - அவுட்டில், பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான சிற்ப பூங்கா உள்ளது.
இங்கு கற்களில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள் மக்களை கவரும் வகையில் உள்ளன.
குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான குதிரை, மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, கல் மீது படுத்து பொம்மை துாங்குவது உட்பட பல சிற்பங்கள் உள்ளன. பூங்காவின் நடைபாதையை தவிர, மற்ற இடங்கள் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது.
புல் தரை மீது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியபடி, சிற்பங்கள் அழகை கண்டு ரசிக்கலாம். குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடுவதற்கும் விசாலமான இடங்கள் உள்ளன. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழலாம்.
கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ள மினி ஆடிட்டோரியம், ஜாக்கிங் செல்ல தனி பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளில் என பல வசதிகள் உள்ளன.
தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரையும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும். மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை பூங்காவில் மின்னும் விளக்குகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மெஜஸ்டிக்கில் இருந்து பூங்கா 15 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பனசங்கரி செல்லும் பி.எம்.டி.சி., பஸ் நம்பர் 12ல் சென்றால், பூங்காவுக்கு செல்ல முடியும்.
மெட்ரோவில் செல்வோர், பனசங்கரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் பூங்காவுக்கு செல்லலாம்.

