/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் அழகிய ரயில் பாலம்
/
கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் அழகிய ரயில் பாலம்
ADDED : டிச 25, 2025 07:20 AM

- நமது நிருபர் -
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில், பாம்பன் பகுதியில் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டு உள்ள ரயில் பாலம் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் உள்ளது. இதே போன்று கே.ஆர்.எஸ்., அணையின் நீர்தேக்க பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அழகிய ரயில் பாலமும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவருகிறது.
மைசூரு மாவட்டம், கிருஷ்ணராஜநகர் தாலுகாவில் உள்ளது சாகர்கட்டே - முலேபெட்லு கிராமம். இந்த கிராமம் மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணாவின் கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்து உள்ள கே.ஆர்.எஸ்., அணையின் நீர்தேக்க பகுதியில் வருகிறது.
மிகவும் சிறிய கிராமமாக இருந்தாலும், இங்கு இயற்கை எழில் கொஞ்சுகிறது. கிராமத்தில் அணையின் நீர்தேக்க பகுதிக்கு நடுவில் ரயில் பாலமும், வாகனங்கள் செல்ல சாலை பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, பாலத்தை கடந்து ரயில் செல்வதை பார்க்கும் போது, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் தான் நினைவுக்கு வரும். பரந்த நீர்நிலை, அமைதியான காட்சிகள் சுற்றுலா பயணியர் மனதை மயக்குகிறது.
ரயி லில் இந்த பாதையில் பயணிக்கும் போது புதிய அனுபவம் கிடைக்கும். அணையின் நீர்தேக்க பகுதி வரை வாகனத்தில் சென்று, குடும்பத்தினருடன் பொழுதுபோக்கவும் ஏற்ற இடமாக உள்ளது. அணை பகுதிக்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளும் வருகின்றன. இதனால் இந்த இடம் பறவை ஆர்வலர்களின் சொர்க்கமாகவும் உள்ளது.
மைசூரி ல் இருந்து 25 கி.மீ., துாரத்தில் சாகர்கட்டே - முலேபெட்லு கிராமம் உள்ளது. மைசூரு நகரை கடந்த பின், கிராமங்கள் வழியாக பயணத்தை தொடர வேண்டும். சாலையின் இருபக்கமும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை, பசலேன காட்சி அளிக்கும் வயல்வெளிகள், கிணறுகள், காய்கறி தோட்டங்களை பார்த்தபடியே செல்வது மனதிற்கு புத்துணர்ச்சி தரும்.

