தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ தாவணகெரே கண்ணாடி மாளிகை

 தாவணகெரே கண்ணாடி மாளிகை

 தாவணகெரே கண்ணாடி மாளிகை


ADDED : ஏப் 09, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டங்களும், ஒவ்வொரு விதத்தில் பிரசித்தி பெற்றவைகளாகும். அதே போன்று தாவணகெரே மாவட்டமும், வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை, தன்னுள்ளே வைத்துள்ளது.

தாவணகெரே மாவட்டத்தில் கிளாஸ் ஹவுஸ் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கண்ணாடி மாளிகை என்ற பெயர் பெற்றது.

கிளாஸ் ஹவுஸ் தாவணகெரேவுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், கண்ணாடி மாளிகையை காண தவறாதீர்கள்.

தாவணகெரே - ஹரிஹரா தேசிய நெடுஞ்சாலை - 4ல், கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு பூச்செடிகள், தாவரங்கள், கலை நயமிக்க மாளிகையை கண்டு ரசிக்கலாம்.

தாவணகெரேவில் இருந்து 8 கி.மீ., ஹரிஹராவில் இருந்து 8 கி.மீ., தொலைவில், கண்ணாடி மாளிகையை அடையலாம். குடும்பத்துடன் வந்தால், இயற்கையை ரசித்து புத்துணர்ச்சி பெறலாம்.

அனைத்து நகரங்களில் இருந்தும், ஹரிஹராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில் வசதிகள் உள்ளன. தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஹரிஹராவில் இறங்கி, வாடகை வாகனத்தில் கண்ணாடி மாளிகைக்கு செல்லலாம்.

சந்தேபென்னுார் குளம் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், சந்தேபென்னுாரில் வரலாற்று பிரசித்தி பெற்ற குளம் அமைந்துள்ளது. இதை காண சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். இதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

குளம் 238 அடி நீளம், 245 அடி அகலம், 30 அடி ஆழம் கொண்டதாகும். குளத்தின் நான்கு திசைகளிலும் படிகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு திசையில் 52 பெரிய படிகள், மற்ற மூன்று இடத்தில் 44 படிகள் உள்ளன. குளத்தை அமைக்கும் போது, இதை சுற்றிலும் ஆறு மண்டபங்கள் கட்டப்பட்டன.

அந்த காலத்தில் குளத்தின் நீர், குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இங்கு மிக அழகான வசந்த மண்டபத்தை காணலாம். சுற்றுலா பயணியரை இந்த குளமும், மண்டபமும் வெகுவாக கவர்ந்திழுக்கிறது. கோடைக்காலத்திலும் குளம் வற்றுவது இல்லை என்பது, ஆச்சரியமான விஷயமாகும்.

சென்னகிரியில் இருந்து 23 கி.மீ., தாவணகெரேவில் இருந்து 36 கி.மீ., தொலைவில் குளம் அமைந்துள்ளது. இங்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

தாவணகெரேவில் வரலாற்று பிரசித்தி பெற்ற துர்காம்பிகை கோவில், ஹரிஹரேஸ்வரா கோவிலும் அமைந்துள்ளது. கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட, தாவணகெரே மாவட்டம் பெஸ்ட் சாய்ஸ். தங்குவதற்கு தரமான ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us