தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ ஒரே மலையில் 35 கோவில்கள் அமைந்துள்ள ஹேமகூடா

 ஒரே மலையில் 35 கோவில்கள் அமைந்துள்ள ஹேமகூடா

 ஒரே மலையில் 35 கோவில்கள் அமைந்துள்ள ஹேமகூடா


ADDED : செப் 30, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

ஹம்பி என்றால் அனைவருக்கும் விஜயநகர பேரரசின் தலைநகரம் என்பது தெரியும். 14 முதல், 16ம் நுாற்றாண்டுகளில் மிகவும் செழிப்பான, பிரமாண்டமான நகரமாக திகழ்ந்தது.

இங்குள்ள விருபாக் ஷா கோவிலின் தென் திசையில், மலையின் மீது, 9ம் நுாற்றாண்டுக்கு முன், ஒரே இடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 35க்கும் மேற்பட்ட சிவன் கோவில்கள், பல துாண்களை கொண்ட மண்டபங்கள் அமைந்துள்ளன.

சமஸ்கிருதத்தில் 'ஹேமா' என்றால் தங்கம், 'கூடா' என்றால் மலை என்று பொருள். சிவபெருமான் இங்கு தவம் செய்தபோது, உள்ளூர் தெய்வமான பம்பா எனும் பார்வதி, அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

பம்பாவின் தவத்தை மெச்சிய சிவன், அவரை திருமணம் செய்ய சம்மதித்த போது, வானத்தில் இருந்து தங்க மழை பொழிந்ததால், இந்த மலைக்கு 'ஹேமகூடா' என்று பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அத்துடன், சிவபெருமானின் தியானத்தை கலைக்க முயன்ற மன்மதனை, சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து எரித்த இடமும் இதுவே என்றும் நம்பப்படுகிறது.

இந்த மலையில் உள்ள கோவில்கள், ஹம்பியின் வழக்கமான விஜயநகர பாணி கட்டட கலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சமணக் கோவில்கள் போல கூம்பு வடிவ கூரைகளை கொண்டுள்ளன.

அதே வேளையில் இது சமணக் கோவில் என்று தவறாக கருதினாலும், இது, முற்றிலும் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட ஹிந்து கோவிலாகும்.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை காண மிகச்சிறந்த இடங்களில் ஹம்பியும் ஒன்று. மாலை நேரத்தில் மறையும் சூரியனின் பொன்னிற ஒளி, இந்த பாறைகள் மீது விழும்போது, முழு இடமும் தங்க நிறத்தில் காட்சியளிக்கும்.

மலையில் இருந்து இறங்கும் வழியில், கடலேகலு எனும் கொண்டைக்கடலை விநாயகர், சசிவேகலு எனும் கடுகு விதை விநாயகர் சிலைகளை காணலாம்.

இந்த மலைக்கோவில் வளாகத்திற்குள் செல்ல நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம்.

எப்படி

செல்வது

விமானத்தில் செல்வோர், ஜிந்தால் வி மான நிலையத்தில் இறங்கி, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஹேமகூடா மலைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்

ரயிலில் செல்வோர், ஹொஸ்பேட் சந்திப்பில் இறங்கி, அங்கிருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள ஹேமகூடா மலைக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்

பஸ்சில் செல்வோர், ஹம்பி பஸ் நிலையத்தில் இறங்கி, 600 மீட்டர் தொலைவில் உள்ள ஹேமகூடா மலைக்கு நடந்தோ, ஆட்டோவிலோ செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us