sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

சாகச பிரியர்களின் கனவுலகம் 'குந்தி பெட்டா'

/

சாகச பிரியர்களின் கனவுலகம் 'குந்தி பெட்டா'

சாகச பிரியர்களின் கனவுலகம் 'குந்தி பெட்டா'

சாகச பிரியர்களின் கனவுலகம் 'குந்தி பெட்டா'


ADDED : பிப் 05, 2025 09:37 PM

Google News

ADDED : பிப் 05, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றுலா செல்வதற்கு பல முறை திட்டம் தீட்டி, ஒரு முறை சென்று வருவதே சாகசம் தான். அதிலும் சாகசம் செய்வதற்காகவே சுற்றுலா சென்றால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். உங்கள் யோசனைக்கு சரியான தீனி போடும் வகையில் இருக்கும் இக்கட்டுரை.

மாண்டியா, பாண்டவபுரா தாலுகாவில் உள்ளது குந்தி பெட்டா. இங்கு பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக காட்சி அளிக்கும் இரண்டு மலைகள் உள்ளன. இந்த மலைகள் 2,882 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. பார்ப்பதற்கே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

இங்கு வருபவர்கள் பெரும்பாலும் மலையேற்றம் செய்வதற்காகவே வருகின்றனர். மலையேற்றத்திற்கான ஏற்ற இடமாக விளங்குகிறது. அது மட்டுமின்றி, இந்த மலையில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இருப்பதால், இங்கு சாகச பிரியர்கள் பலர் சைக்கிள் ஓட்டி மகிழ்கின்றனர்.

இங்கு மலையேற்றம் என்பது கடினமாக இல்லை. இருப்பினும், புதிதாக மலையேறுபவர்கள் பாதுகாப்பாக மலையேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலை ஏறுவது சிரமமாக இருந்தாலும், மலை உச்சியை அடையும் போது, பல அடி உயரத்திலிருந்து நகரத்தை பார்க்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கு இரவு நேரங்களிலும் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால், இங்கு பலரும் வருகை தருகின்றனர்.

மலை முழுதும் செங்குத்தாக இருப்பதால், ஏறும் போதும், இறங்கும் போதும் சாகசத்திற்கு பஞ்சம் இருக்காது. மேலும் இங்கு நீங்கள் முகாமிட்டு தங்கி கொள்ளலாம்.

முகாமில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ஒன்றாக இருந்து, நிலா வெளிச்சத்தில் உரையாடும் போது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும், இங்கு நீங்கள் உணவு செய்தும், சாப்பிட்டு மகிழலாம்.

ஒரு வழியாக மலை ஏற்றத்தை முடித்துவிட்டு, கீழே வரும் போது தொன்னுார் ஏரியை பார்வையிடலாம். ஏரியில் குளிப்பதற்கு அனுமதி உள்ளது.

இதனால் சுத்தமான நீரில் குளித்து உடலிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த ஏரிக்கு கே.எஸ்.ஆர்., அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால், ஆண்டு முழுதும் ஏரியில் தண்ணீர் இருக்கும். ஏரியில் ஆழம் அதிகமான பகுதிகள் இருப்பதால், நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே குளிப்பது நல்லது.

இங்கு போட்டிங் வசதிகளும் உள்ளது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாக சவாரி செல்கின்றனர். மீன் பிடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எப்படி செல்வது?


விமானம்: முதலில் மைசூரு விமான நிலையத்திற்கு வர வேண்டும். பின், அங்கிருந்து டாக்சி மூலம் குந்தி பெட்டாவை அடையலாம்.

ரயில்: முதலில் பான்டவபுரா ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். பின், அங்கிருந்து 8 கி.மீ.,யில் மலை உள்ளது. டாக்சி மூலம் வந்து அடையலாம்.

பஸ்: பெங்களூரில் இருந்து பஸ் மூலம் மங்களூரு பஸ் நிலையத்திற்கு வரவும். அங்கிருந்து பஸ் மூலம் பான்டவாபுரா பஸ் நிலையம் வரலாம். பின், டாக்சி அல்லது ஆட்டோ மூலம் குந்தி பெட்டாவை அடையலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us