அமைதியாக நேரத்தை செலவிட பாடா கடற்கரைக்கு செல்வோம்!
அமைதியாக நேரத்தை செலவிட பாடா கடற்கரைக்கு செல்வோம்!
ADDED : செப் 24, 2026 12:32 AM

-நமது நிருபர் -:
உத்தர கன்னடா மாவட்டம், கும்தா பகுதியில் பாடா கடற்கரை உள்ளது. இது, கோகர்ணாவுக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கடற்கரை குப்பையின்றி துாய்மையாக காட்சியளிக்கும். இது, அதிக மக்கள் கூட்டம், கூடாத இடமாகும். இதனால், எப்போதும் அமைதியாக இருக்கும். அதிக கடைகளும் இருக்காது. இது, மனதிற்கு அமைதியை தரும்.
இங்கு உள்ளூர்வாசிகள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளுவர். இந்த கடற்கரை சூரிய ஒளியில் ஓய்வு எடுப்பதற்கு சிறந்தது. இங்கு சூரிய அஸ்தமனக் காட்சிகளை கண்டு களிக்கலாம். சூரிய அஸ்தமனத்தை பலரும் படம்பிடித்து மகிழ்வர்.
இது போன்ற காரணங்களால், பாடா கடற்கரை பலருக்கும் பிடித்தமான இடமாக இருக்கிறது. கடற்கரை பகுதியில் சிறிய அளவிலான குடிசைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் அமர்ந்து கொண்டு கடலின் அழகை ரசிக்கலாம். இங்கு மீன்கள் விற்கப்படும். இதை குறைந்த விலையில் வாங்கி சாப்பிடலாம். குடும்பத்துடன் சென்று அமைதியான முறையில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற கடற்கரையாக இது இருக்கும்.
