sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 புகைப்பட கலைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மலவள்ளி ஏரி

/

 புகைப்பட கலைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மலவள்ளி ஏரி

 புகைப்பட கலைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மலவள்ளி ஏரி

 புகைப்பட கலைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மலவள்ளி ஏரி


ADDED : ஜன 22, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர்-

மாண்டியா மாவட்டம் என்றவுடன், அழகான ஏரிகள், ஆறுகள், கே.ஆர்.எஸ்., அணை போன்றவையே ஞாபகத்திற்கு வரும். இந்த வரிசையில் மலவள்ளி ஏரியை எளிதில் கடந்து விட்டு செல்ல முடியாது.

ஷிம்ஷா ஆற்றிலிருந்து உருவாகும் ஏரி, அழகாக கிராமங்களை கடந்து செல்கிறது. இந்த ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல், டிரெக்கிங், பிக்னிக் போன்றவை அதிகளவில் நடக்கின்றன. இந்த ஏரியில் படகு சவாரி வழக்கமான இன்ஜின் படகில் இல்லாமல், பரிசல் படகில் மேற்கொள்ளப்படுகிறது.

இது, நல்ல அனுபவத்தை தரும். இதற்கு, 300 முதல் 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, மீன்பிடித்தல் என்பது, சிலருக்கு பொழுது போக்காகவும், பலருக்கு தங்கள் வாழ்க்கைக்காகவும் உள்ளது. இந்த ஏரி பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

பறவை இனங்கள் இது ஒரு புறமிருக்க, மலவள்ளி ஏரியின் முக்கிய விஷயமே அங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் தான். இங்கு, 100க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பறவைகள் வருகின்றன. ஏரி அமைந்துள்ள பகுதியின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போதே, பல பறவைகளை நம்மால் பார்க்க முடியும். வாகனத்தில் இருந்து இறங்கி, அவைகளை ரசிக்கலாம். அவ்வாறு ரசிக்கும் போது, அவைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பது முக்கியமான விஷயம்.

இங்கு வருவோரில் பலரும் பறவைகளை படம் எடுக்கின்றனர். அதற்காக கைகளில் மிகப்பெரிய அளவிலான கேமரா வைத்திருப்பதை காண முடியும். பறவைகளை பல கோணங்களில் படம் எடுத்து மகிழ்வர்.

மீன் உணவு அவர்கள் எடுத்த படங்கள் பாராட்டை பெற்று உள்ளன. இந்த ஏரி, 500 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்கு சுற்றிப்பார்க்கவும் பல இடங்கள் உண்டு. அதுபோல, சுவையான மீன் உணவும் கிடைக்கும். இதை கட்டுரையை படித்த புகைப்பட கலைஞர்கள், தாராளமாக மலவள்ளி ஏரிக்கு சென்று புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஏற்ற காலம். புதிதாக வருவோர் பறவைகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் படம் எடுப்பது முக்கியம். அதுபோல, பிளாஸ்டிக் பாட்டில் உட்பட எந்த குப்பையையும் வீசிவிட்டு செல்லக்கூடாது.

இந்த இடத்திற்கு செல்வோர், நிச்சயம் தங்கள் சொந்த வாகனத்திலே செல்ல வேண் டும். அப்போது தான், தாங்கள் நினைத்த இடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கையை ரசிக்க முடியும்.






      Dinamalar
      Follow us