/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கபினி நதியால் கண்களை கவரும் நாகரஹொளே தேசிய சரணாலயம்
/
கபினி நதியால் கண்களை கவரும் நாகரஹொளே தேசிய சரணாலயம்
கபினி நதியால் கண்களை கவரும் நாகரஹொளே தேசிய சரணாலயம்
கபினி நதியால் கண்களை கவரும் நாகரஹொளே தேசிய சரணாலயம்
ADDED : ஏப் 24, 2025 07:25 AM

வனம், வன விலங்குகளை பார்வையிட பிடித்தவர்களுக்கு அருமையான ஒரு சுற்றுலா தலம் தான் கபினி ஆற்றால் செழித்திருக்கும் நாகரஹொளே தேசிய சரணாலயம்.
பசுமையான நிலப்பரப்புகள், கபினி ஆறு, அடர்ந்த வனப்பகுதி ஆகியவை பல்லுயிர் விலங்குகள் உயிர்வாழ்வதற்கு ஏற்றவாறு இருக்கிறது.
கபினி ஆறு, மைசூரு மற்றும் குடகு மாவட்டத்தில் உள்ள நாகரஹொளே தேசிய பூங்காவின் வழியாக பாய்கிறது. இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஜீப் சபாரியில் சென்று வனவிலங்குகளை பார்வையிடலாம். சரணாலயத்தின் வழியாக பாயும் கபினி ஆற்றின் கரைகளில், யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடியும்.
இங்கு அதிக அளவிலான வங்காள புலிகள் உள்ளன. இவற்றை பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இங்கு 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து செல்கின்றன. மலபார் பைட், ஹார்னிபில் போன்ற பறவை இனங்களை அதிகம் காணலாம்.
இங்கு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுவது ஜீப் சபாரி தான். இந்த ஜீப் சபாரியின் போது, வன விலங்குகளை அருகில் சென்று பார்வையிட முடியும். அப்போது, அவற்றை புகைப்படம் எடுத்தும் மகிழலாம். ஆனால், அச்சமயங்களில் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது அவசியமாகும்.
இதை தவிர, படகு சவாரியும் உள்ளது. படகு சவாரி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. ஏனெனில், அப்போது விலங்குகளின் நடமாட்டம் கரைப்பகுதியில் அதிகமாக இருக்கும்.
எனவே, கபினி ஆற்றில் சவாரி செய்து கொண்டே வன விலங்குகளையும் பார்வையிட்டு மகிழலாம். இந்த அனைத்து அனுபவங்களையும் கண்டுகளித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்காக அப்பகுதியில் பல ரிசார்ட்கள் உள்ளன.
பட்ஜெட்டுக்கு பாதகம் இல்லாத வகையிலான ரிசார்ட்கள் முதல் ஆடம்பர ரிசார்ட்டுகள் வரை அனைத்தும் உள்ளன. இவைகளும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறே உள்ளன. இதனால், நாம் எப்போதுமே இயற்கையுடன் உறவாடி கொண்டிருக்கும் தோற்றம் ஏற்படும்.
சரணாலயத்தில் நுழைவதற்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சபாரி, படகு சவாரி, வாகனம் நிறுத்துவதற்கு என தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வன விலங்கு பிரியர்கள், புகைப்பட கலைஞர்கள், இயற்கை தாயின் மடியில் படுத்து ஓய்வு எடுக்க நினைப்பவர்கள் அனைவரும் கட்டாயம் இங்கு வருகை தரலாம்.
-நமது நிருபர் -

