/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குட்டீஸ்களின் 'பேவரிட் ஸ்பாட்' நாகரபாவி ஜென் பார்க்
/
குட்டீஸ்களின் 'பேவரிட் ஸ்பாட்' நாகரபாவி ஜென் பார்க்
குட்டீஸ்களின் 'பேவரிட் ஸ்பாட்' நாகரபாவி ஜென் பார்க்
குட்டீஸ்களின் 'பேவரிட் ஸ்பாட்' நாகரபாவி ஜென் பார்க்
ADDED : மார் 27, 2025 05:47 AM

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. இனிமேல் பெற்றோர்களுக்கு என்ன வேலை? குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டியது தான்.
பெங்களூரில் சுற்றி பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. பூங்கா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கப்பன் பார்க், லால்பாக். இந்த இரண்டு பூங்காவிற்கும் மீண்டும் மீண்டும் சென்று போர் அடித்துவிட்டதா? இந்த இரண்டு பூங்காக்களுக்கும் மாற்றாக உள்ளது ஜென் பார்க்.
பெங்களூரு நாகரபாவி பி.டி.ஏ., லே - அவுட் 2வது ஸ்டேஜில் உள்ளது. இந்த பார்க் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இது அதிகம் அறியப்படாத பூங்காவாக உள்ளது.
உயரமான மரங்களும், பசுமையான புல்லும் இந்த பூங்காவிற்கு அமைதியான சூழ்நிலையை கொடுக்கின்றன. குழந்தைகளை கவரும் வகையிலான கற்களால் ஆன சிற்பங்கள் நிறைய உள்ளன. குடும்பத்தினருடன் பொழுதுபோக்கவும் ஏற்ற இடமாகவும் உள்ளது.
தினமும் அதிகாலை 5:30 முதல் காலை 9:30 மணி வரை பார்க் திறந்திருக்கும். நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.
பார்க்கிற்கு மெட்ரோ ரயிலில் சென்றால் விஜயநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். பஸ்சில் சென்றால் நாகரபாவி சென்று அங்கிருந்து பார்க்கை சென்றடையலாம்.
- நமது நிருபர் -