/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கை ஆர்வலர்களின் 'வியூ பாயின்ட்'
/
இயற்கை ஆர்வலர்களின் 'வியூ பாயின்ட்'
ADDED : மார் 19, 2025 11:50 PM

சிக்கமகளூரு மாவட்டம், கர்நாடகாவின் 'காபி'கள் நிலம் என்று கூறப்படுகிறது. இம்மாவட்டத்தின், துர்கதஹள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது, 'ராணி ஜாரி வியூ பாயின்ட்' மலை. மெய்சிலிர்க்க வைக்கும் இம்மலை, இயற்கை ஆர்வலர்களுக்கும், மலையேற்றம் செய்வோருக்கு சிறந்த இடமாகும்.
ஆனால், பெரும்பாலோருக்கு இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த வியூ பாயின்ட்.
இம்மலையின் உச்சியில் நின்றபடி, 180 டிகிரி கோணத்தில் மலையை சுற்றி உள்ள புல் வெளிகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனப்பகுதி, கட்டிகள்ளு வியூபாயின்ட், குத்ரேமுக் தேசிய பூங்கா, பல்லராயன துர்கா கோட்டையை கண்டு ரசிக்கலாம்.
மலையேற்றம் மூலமாகவும் இந்த வியூ பாயின்டை அடையலாம். இங்கு 4 கி.மீ., துாரம் மலையேற்றத்தை, துர்கதஹள்ளி கிராமத்தின் காலபைரேஸ்வரர் கோவிலில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக துவங்க வேண்டும்.
மலையேற்றம் செல்வோர், ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். செல்லும் வழியில் ஏராளமான அட்டை பூச்சிகள் இருக்கும்.
உங்களின் இனிமையான மலையேற்றத்தை கெடுத்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
ராணி ஜாரி மலையின் அழகை ரசிக்க விரும்பினால், நவம்பர் முதல் மே மாதங்களில் செல்லவது சிறந்தது. மழை காலத்தில் நீங்கள் தாராளமாக இங்கு செல்லலாம்.
மற்ற நாட்களை விட, மழை காலத்தில் சென்றால், மேகங்கள் அருகில் இருந்து மழை பெய்வதை கண்டு ரசிக்கலாம். ஆனால் மழை கோட் கொண்டு செல்ல மறந்துவிடாதீர்கள்.
1 பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் ராணி ஜாரி மலைக்கு, மூன்றரை மணி நேரத்தில் சென்றடையலாம்
2 ரயிலில் செல்வோர், சிக்கமகளூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள ராணி ஜாரிக்கு செல்லலாம்
3பஸ்சில் செல்வோர், மூடிகெரே பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள ராணி ஜாரிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
- நமது நிருபர் -