/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
119 ஆண்டு வரலாறு கொண்ட வாணி விலாஸ் அணை
/
119 ஆண்டு வரலாறு கொண்ட வாணி விலாஸ் அணை
ADDED : ஜன 08, 2026 05:40 AM

- நமது நிருபர் -:
சித்ரதுர்கா மாவட்டத்தில், கோட்டை, அரண்மனைகள், புராதன கோவில்கள் உட்பட பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் வாணி விலாஸ் அணையும் ஒன்றாகும். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சித்ரதுர்கா, 'கோட்டை மாவட்டம்' என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள வாணி விலாஸ் அணை, 117 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். அணையின் இடது, வலது புறம் கருப்பு நிற கற்களால் கட்டப்பட்ட, அழகான மண்டபங்கள் உள்ளன.
மண்டபத்தில் நின்று பார்த்தால், அணையை சுற்றிலும் கண்களை கவரும் பசுமையான காட்சிகள் தென்படுகின்றன.
இங்குள்ள குன்றின் மீது நின்று, அணையை பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். பாக்கு, தென்னை தோட்டங்களின் அழகை காணலாம்.
இங்கு சூரியன் அஸ்தமனமாகும் அழகை பார்க்க, இரண்டு கண்கள் போதாது. அணையின் இடது புறம் உத்தரிகுட்டா, வலது புறம் சத்ரிகுட்டா இடையே மறையும் சூரியனை பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் அணையில் இருந்தால், சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரு தாலுகாவின், வாணி விலாஸ்புரா அருகில், வேதாவதி ஆற்றுக்கு குறுக்கே, 1907ல் அணை கட்டப்பட்டது.
மைசூரின் நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் இதை கட்டினார். 119 ஆண்டுகள் வரலாறு கொண்டது.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், இங்கு அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
வெட்டிங் போட்டோ ஷூட்டும் நடப்பதுண்டு. அமைதியான சூழ்நிலையை ரசிக்க விரும்புவோருக்கு, வாணி விலாஸ் அணை பெஸ்ட் சாய்ஸ்.

