/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மலையேற்றத்துக்கு சரியான இடம் நிஷானி மோட்டே
/
மலையேற்றத்துக்கு சரியான இடம் நிஷானி மோட்டே
ADDED : ஜன 01, 2026 06:48 AM

- நமது நிருபர் -
கர்நா டகாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் குடகு. இங்கு காபித் தோட்டங்கள், அடர்ந்த காடுகள், பனிமூட்டம் சூழ்ந்த மலைச் சிகரங்கள் என அனைத்தும் சேர்ந்த அழகான இடம். இங்குள்ள நிஷானி மோட்டே மலை பிரபலமாகி வருகிறது.
பி ரம்மகிரி மலைத்தொடரின் ஒரு பகுதியே நிஷானி மோட்டே மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,270 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை, உண்மையிலேயே மிக அழகானது.
இந்த மலையின் உச்சியை மேகங்கள் முத்தமிட்டு செல்கின்றன. அடர்ந்த புல்வெளி, காடு, மலைப்பாதை ஆகியவை உள்ளன.
இந்த மலையில் 'டிரெக்கிங்' எனும் மலையேற்றத்துக்கு அனுமதி உண்டு. வனத்துறையினரிடம் அனுமதி பெற்று செல்வது கட்டாயமாகும். தினமும் பலரும் டிரெக்கிங் செய்து வருகின்றனர். இந்த டிரெக்கிங் பயணம், காபித் தோட்டங்களில் இருந்து துவங்குகிறது. பின்னர், அடர்ந்த காடுகள் வழியாக செல்கிறது. பாதை மாறிக்கொண்டே செல்லும். வழியெங்கும் மலர், பட்டாம்பூச்சி, மான், குரங்கு போன்ற விலங்குகளையும் பார்க்க முடியும்.
இவை அனைத்தையும் பார்த்தவாறு மலையில் சிகரத்தை அடைந்தவுடன், சுற்றிலும் பரந்து விரிந்த மலைத்தொடர் கண் முன் விரியும். மேகங்களுக்குள் நாம் இருப்பது போன்ற மாயை ஏற்படும். இதை புகைப்படம் எடுத்து மகிழலாம். இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை செல்வது சிறப்பு. மழைக்காலத்தில் மலையேறுவது சற்று கடினமாகவே இருக்கும். இங்கு மலையேறுவதற்கு வருவோர் குடிநீர், உணவு, மாற்று உடைகள் ஆகியவற்றை நிச்சயம் எடுத்து செல்ல வேண்டும்.
நகர வாழ்வில் இருந்து சிறிது விடுபட நினைத்தால் நிஷானி மோட்டே மலைக்கு செல்லலாம். கூர்க் செல்வோர் காபி பொடியை வாங்கி வர மறக்காதீர்.
சொந்த வாகனத்தில் செல்லலாம் இந்த இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்து சரியான தேர்வு இல்லை. எனவே, மலையேற்றத்துக்கு செல்வோர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பு.

