/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குழந்தைகளை கவரும் ரணதீரா கண்டீரவா பார்க்
/
குழந்தைகளை கவரும் ரணதீரா கண்டீரவா பார்க்
ADDED : செப் 24, 2025 11:11 PM

பெங்களூரில் கப்பன் பார்க், லால்பாக்கிற்கு அடிக்கடி சென்று 'போர்' அடித்து விட்டால், அதற்கு மாற்றாக நிறைய பார்க், ஏரிகள், பொழுதுபோக்கு அரங்குகள் உள்ளன. இதில் ஒன்று பெங்களூரில் உள்ள ரனதீரா கன்டீரவா பார்க்.
ஜெ யநகரின் ஆர்.வி.ரோட்டில் இந்த பார்க் அமைந்துள்ளது. பசுமை கொஞ்சும் இந்த பார்க்கில் கடம்ப வம்சத்தின் மயூர வர்மா, சாளுக்கிய வம்சத்தின் இம்மாடி புலிகேசி, ராஷ்ட்ரகூட வம்சத்தின் அமொக வர்ஷ நிருபதுங்கா, ஹொய்சாளா வம்சத்தின் விஷ்ணுவர்த்தன், விஜயநகர வம்சத்தின் கிருஷ்ணதேவராயர் உட்பட பல அரச வம்சங்களின் ஆட்சி யாளர்கள் சிலை உள்ளன.
நீங்கள் பார்க்கிற்குள் செல்லும்போதே இந்த சிலைகள் உங்களை வரவேற்கும். தவிர நடிகர் ராஜ்குமார் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் சிலையும் உள்ளது.
உயரமான மரங்களுக்கு நடுவில் குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு நிதானமாக நடந்து சென்று, இயற்கையின் அழகை ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்குகள் உட்பட வண்ணமயமான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
பார்க் வளாகத்திற்குள் அழகிய மலர் தோட்டங்கள், பூக்களின் வடிவில் இருக்கைகள், மீன்கள், வாத்துகளால் நிறைந்த அழகிய குளம் என்று, பார்த்துக் கொண்டே சென்றால், நேரம் போவதே தெரியாது.
சிரித்தபடி குழந்தை பால் குடிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள சிலை; ஜோக்கர் உட்பட பல சிலைகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை வரவழைக்கும் வகையில் உள்ளன. இந்த பார்க்கிற்கு செல்லும் பெரியவர்கள் கூட, குழந்தைகளாக மாறி விடுகின்றனர்.
இரவில் சிலைகளில் இருந்து வெளியே றும் தண்ணீரை பார்க்க பிரமிப்பாக இருக்கும். அதிலும் காவிரி தாய் சிலையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை மின்னொளியில பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும். இங்கு உடற்பயிற்சி செய்யவும் உபகரணங்கள் உள்ளன. தினமும் அதிகாலை 5:00 மணி முதல் 9:00 வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் பார்க் திறந் திருக்கும்.
- நமது நிருபர் -