sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 குடும்பத்தினருடன் நெல்லிகுட்டே ஏரிக்கு செல்வோமா?

/

 குடும்பத்தினருடன் நெல்லிகுட்டே ஏரிக்கு செல்வோமா?

 குடும்பத்தினருடன் நெல்லிகுட்டே ஏரிக்கு செல்வோமா?

 குடும்பத்தினருடன் நெல்லிகுட்டே ஏரிக்கு செல்வோமா?


ADDED : நவ 12, 2025 09:56 PM

Google News

ADDED : நவ 12, 2025 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களே... வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட, அமைதியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா... உங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது நெல்லிகுட்டே ஏரி.

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி அருகே நெல்லிகுட்டே ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி அமைந்துள்ள இடம் அமைதியான, அழகிய சூழலை ரசிக்கும் இடமாக உள்ளது.

ஏரியின் பறந்து விரிந்த கரையில் அமர்ந்து குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு, உணவு சாப்பிடுவது புதிய அனுபவமாக இருக்கும். ஏரிக்கரையில் நடந்து சென்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும் இந்த இடம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

அதிகாலை, மாலை நேரத்தில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும் சிறந்த இடமாக உள்ளது. ஏரியை சுற்றி பல வயல்வெளிகள் உள்ளன. பசுமையாக காட்சியளிக்கும் வயல் பகுதியில் புகைப்படம் எடுத்து மகிழலாம். பறவைகளின் புகலிடமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது.

ஏரி கரை மீது பைக், சைக்கிள் ஓட்டியபடி ஏரியின் பறந்த நீர் நிலையை கண்டு ரசிக்கலாம்.

கோடைகாலத்தில் இப்பகுதியில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், குளிர், பருவமழை காலங்களில் ரம்மியமான சூழலை கண்டு ரசிக்கலாம்.

ஏரிக்கு செல்லும் வழியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராம மக்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் மஞ்சனபேலே அணையை சென்றடையலாம்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து பிடதி 40 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பிடதிக்கு பஸ் வசதி உள்ளது.

ரயிலில் செல்வோர் பிடதியில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.






      Dinamalar
      Follow us