தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சோம்பல் கரடி' என்பது இந்தியா, இலங்கை, நேபாளத்தின் வறண்ட காடுகளில் வசிக்கும், தனித்துவமான பாலுாட்டி வகையாக அறியப்படுகிறது.

நீண்ட, வளைந்த நகங்கள், கரையான்களை உறிஞ்சி உண்ணும் சிறப்பு வாய்ந்த உதடுகளை கொண்ட சோம்பல் கரடி, இரவில் சுறுசுறுப்பாகவும், பகலில் சோம்பலாகவும் இருக்கும். இதன் ஆயுள்காலம், 20 முதல் 30 ஆண்டுகள்.

இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் சோம்பல் கரடி சரணாலயம், கர்நாடகாவின் பல்லாரியில், 1994 ல் துவங்கப்பட்டது. பல்லாரியின் சண்டூர், கூட்லிகி தாலுகாக்களில், 167.59 சதுர கி.மீ., துாரத்திற்கு சரணாலயம் பரந்து விரிந்து உள்ளது. இங்கு, 60 சோம்பல் கரடிகள் வசிக்கின்றன.

இங்கு சுற்றுலா வருவோர் சோம்பல் கரடியை மட்டுமின்றி சிறுத்தை, சிறிய புனுகு பூனை, பனை புனுகு பூனை, காட்டு பூனை, நரி, முள்ளம்பன்றிகள், நட்சத்திர ஆமைகள் இந்திய சாம்பல் ஓநாய், கழுதைபுலி, காட்டுபன்றி, பாங்கோலின் உள்ளிட்ட விலங்குகளையும், வைப்பர், கிரெய்ட்ஸ் உள்ளிட்ட விஷ பாம்புகளையும், ரெட் சாண்ட் போவா போன்ற விஷமற்ற பாம்புகளையும் காணும் வாய்ப்பு உண்டு.

மயில்கள், பறவைகளின் தாயகமாகவும் சரணாலயம் அமைந்து உள்ளது. குடேகாட் காட்டில் அமைந்திருக்கும் சரணாலயத்தில், சீதா பழம் மரங்களும் உள்ளன.

தினமும் மாலை 4:00 முதல் மாலை 6:00 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும். சபாரி செல்ல ஒரு நபருக்கு, 2,000 ரூபாய் கட்டணமாகும்.

எப்படி செல்வது?  பெங்களூரில் இருந்து, 270 கி.மீ., துாரத்தில் சரணாலயம் உள்ளது.

 மெஜஸ்டிக்கில் இருந்து கூட்லிகி, சண்டூர் செல்லும் அரசு பஸ்சில் செல்லலாம்.

 ரயிலில் செல்வோர் பல்லாரி அல்லது சித்ரதுர்காவின் மொலகால்மூர் ரயில் நிலையத்தில் இறங்கினால், சரணாலயத்தை எளிதாக அடையலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us