/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
புதிய வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம்
/
புதிய வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம்
ADDED : மார் 25, 2025 12:17 AM
பெங்களூரு : “புதிதாக கட்டப்படும் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் நிறுவுவது கட்டாயம்,” என, கர்நாடக மின் பகிர்மானம் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக நிறுவப்படும். பல மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டரின் பயன்பாடுகள் உள்ளன.
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், மின் கட்டணத்தை குறிக்க ஊழியர்கள் செல்ல தேவையில்லை. புதியதாக கட்டப்படும் வீடுகளில் நிறுவுவது கட்டாயம்.
கர்நாடகாவில், கடந்த ஆறு மாதங்களில் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 17,220 மெகாவாட்டாக இருந்த மின்சார தேவை, இந்த ஆண்டு 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் வரை பஞ்சாப்பில் இருந்து 200 முதல் 300 மெகாவாட், உத்தர பிரதேசத்தில் இருந்து 1,400 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும்.
விவசாயிகள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின் பற்றாக்குறையை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.