/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
காலபைரவர் காவலுக்கு நிற்கு ம் உடுப்பியின் சுபர்ஷா குகை
/
காலபைரவர் காவலுக்கு நிற்கு ம் உடுப்பியின் சுபர்ஷா குகை
காலபைரவர் காவலுக்கு நிற்கு ம் உடுப்பியின் சுபர்ஷா குகை
காலபைரவர் காவலுக்கு நிற்கு ம் உடுப்பியின் சுபர்ஷா குகை
ADDED : ஜூலை 16, 2025 11:16 PM

உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் இருந்து 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ பிராமி துர்கா பரமேஸ்வரி கோவில். இக்கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் குப்ஜா ஆற்றின் அருகில், 'சுபர்ஷா குகை' அமைந்துள்ளது.
புராணங்கள்படி, கிருத யுகத்தில் சுபர்ஷா என்ற ராஜா வாழ்ந்து வந்தார். தன் பாவங்களை நீங்கவும், மோட்சம் கிடைக்கவும் சிவனை நினைத்து தியானம் செய்ய சரியான இடத்தைத் தேடி வந்தார்.
அப்போது குப்ஜா ஆற்றின் அருகில் இந்த குகையை கண்டார். இந்த குகையில் அவர் தியானத்தில் இருக்கும் போது, மெச்சிய சிவபெருமான், சுபர்ஷாவை யாரும் தொந்தரவு செய்யாதபடி, தன் காலபைரவரை, குகையின் முன் காவலுக்கு நிறுத்தினார். இதனாலேயே, இதற்கு 'சுபர்ஷா குகை' என்று பெயர் வந்தது.
இங்கு இதுபோன்று வரதாபுராவின் ஸ்ரீ ஸ்ரீதரா சுவாமிகள் உட்பட பல மஹரிஷிகள், ராஜாக்கள் தியானம் செய்து மோட்சம் பெற்றனர். இன்றும் கூட, இந்த குகையின் வெளியே காலபைரவர் சிலை உள்ளது. அத்துடன், குகைக்குள் மூன்று சிவலிங்கங்கள் உள்ளன. இதை சரஸ்வதி, லட்சுமி, காளியாக பாவித்து, 'ஸ்த்ரி சக்தி லிங்கம்' என்று அழைக்கின்றனர்.
குகைக்குள் சென்றவுடன், வலது புறத்தில் ராஜா சுபர்ஷா, ஸ்ரீ ஸ்ரீதரா சுவாமிகள், ஆதி சேஷா ஆகியோர் பல ஆண்டுகளாக தியானம் செய்த இடம் உள்ளது. இன்னும் உள்ளே சென்றால், 'நாக தீர்த்தா' நீர் ஊற்று உள்ளது. இந்த நீர் ஊற்று, கப்ஜா ஆற்றில் கலக்கிறது.
காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இக்குகையை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
17_Article_0002, 17_Article_0001
. (அடுத்த படம்)
- நமது நிருபர் -