/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மனதுக்கு இ தமளிக்கும் கோசல்லி அப்பி நீர்வீழ்ச்சி
/
மனதுக்கு இ தமளிக்கும் கோசல்லி அப்பி நீர்வீழ்ச்சி
ADDED : நவ 20, 2025 03:41 AM

உடுப்பி மாவட்டம், கர்நாடகாவின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளதால், புண்ணிய தலமாக விளங்குகிறது. உடுப்பியில் அற்புதமான சுற்றுலா தலங்கள், கடற்கரைகளும் உள்ளன. இவற்றில் கோசல்லி அப்பி நீர் வீழ்ச்சியும் சுற்றுலா பயணியரை கவர்கிறது.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின், ஷிரூரில் அடர்த்தியான வனத்தில் கோசல்லி நீர் வீழ்ச்சி உள்ளது. அபூர்வமான மரங்கள், தாவரங்கள் சூழ்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. பைந்துார் மொழியில், 'அப்பி' என்றால் தாய் என அர்த்தமாகும். இந்த நீர் வீழ்ச்சியை தாயுடன் ஒப்பிட்டு, 'கோசல்லி அப்பி நீர்வீழ்ச்சி' என, அழைக்கின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இதில் வெளி நாட்டவரும் அதிகம்.
எப்போதும் பர பரப்பான நகர வாழ்க்கையால், அலுத்து போன மக்கள், அமைதியான சூழ்நிலையில், இயற்கைக்கு நடுவில் பொழுது போக்க விரும்பினால், கோசல்லி அப்பி நீர் வீழ்ச்சி, பெஸ்ட் சாய்ஸ். சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, இயற்கை காட்சிகளை மட்டுமே காணலாம். இந்த சூழ்நிலை மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இதை அனுபவிப்பது தனி சுகம் என்பதால், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர், கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
கோசல்லி அப்பி நீர் வீழ்ச்சியின் சுற்றுப்பகுதிகளில், 6,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட மூலிகை தாவரங்கள் உள்ளன. இங்குள்ள குளிர்ச்சியான சூழ்நிலை மனதுக்கு இதமளிக்கு ம். சளசளவென பாயும் நீரின் சத்தம், காதுகளுக்கு இனிமையாக இருக்கும்.
பாறைக்கற்களுக்கு இடையே வளைந்து, நெளிந்து பாய்ந்து வரும் நீர் வீழ்ச்சியில் குளிப்பது, மறக்க முடியாத அற்புதமான அனுபவமாக இருக்கும். இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நீரில் இறங்குவதற்கு முன், உள்ளூர் மக்களிடம் நீர் வீழ்ச்சியின் ஆழம் குறித்து, தகவல் தெரிந்து கொள்வது நல்லது .
நீர் வீழ்ச்சிக்கு செல்லும் வழி, அடர்ந்த வனப்பகுதி என்பதால், இருள் சூழ்வதற்குள் திரும்ப வேண்டும். குடும்பத்துடன், நண்பர்களுடன் உடுப்பிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் இரு ந்தால், சுற்றுலா தலங்களின் பட்டியலில், கோசல்லி அப்பி நீர் வீழ்ச்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். நீர் வீழ்ச்சியை ரசித்து, 'என்ஜாய்' செய்யுங்கள்.
எப்படி செல்வது? உடுப்பி, பைந்துாரின், ஷிரூரு கிராமத்தில் கோசல்லி நீர் வீழ்ச்சி உள்ளது. பெங்களூரில் இருந்து 467 கி.மீ., மங்களூரில் இருந்து 124 கி.மீ., மைசூரில் இருந்து 374 கி.மீ., தொலைவில் பைந்துார் உள்ளது.
முக்கிய நகரங்களில் இருந்து, பை ந்துாருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் ஏராளம். பஸ், ரயிலில் பைந்துாரில் வந்திறங்கி, வாடகை வாகனங்களில் நீர் வீழ்ச்சிக்கு செல்லலாம். மூன்று கி.மீ., தொலைவு அடர்த்தியான வனப்பகுதியில் நடந்து சென்றால், நீர் வீழ்ச்சியை அடையலாம்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: கிருஷ்ணர் மடம், மூகாம்பிகை கோவில், மரவந்தே கடற்கரை, முருடேஸ்வரா.

